Tuesday, September 30, 2014

Varaha Puranam - Padmanabha Dwadashi Vrutam !!

Jai Sriman Naryana !!

 
 Varaha Puranam describes 'Padmanabha Dwadashi Vrutam', 
worship of the Supreme Lord Vishnu.

The austerity begins from the twelfth day of bright half of the month Ashwin.  As a part of the
 austerities worship of Lord Vishnu from His Feet to beautiful hair locks, sacred bath to Lord,
 offering fruits, flowers and sandalwood paste are done.   As a concluding part of the fast the
 worshipped idol of Lord Vishnu along with alms should be donated to a Brahmin.  It is believed 
that one who observes the Padmanabha Dwadashi Vrutham attains all the prosperities all through
 their life and ultimately reaches the heavenly abode of Lord Vishnu. 

Varaha Puranam !! Shanti Vrutham !

Jai Sriman Narayana !!

 
       
Varaha Puranam describes 'Shanti Vrutham' to obtain peace and tranquility in the families.  The 
austerities begin on the Fifth day of bright half of the month  Karthik.  Worship of Lord Vishnu
 along with Adishesha is treated as propitious on this day.  Whoever fasts on the Fifth day of 
bright half of the month Karthik and continues for a year long fast on every Fifth day of bright half of
 every month brings serenity in the family.   As a part of the austerities, worship of Lord Vishnu"s
 idol with the offering of milk, performance of sacrificial fire has to be done.  As a concluding part,
 the Brahmins should be fed and given alms abundantly along with the idol of Adishesha. 
 It is believed that by performing Shanti Vrutham, the worshipper brings peace and contentment in
 the family.

utsava vigraha of sri kanaka durga devi in vijayawada
கௌமாரி அம்மன்
ஓம் கௌமாரியை நம

நவராத்திரி 2ம் நாள்.
கௌமாரி அம்மன்
ஓம் கௌமாரியை நம
Om Jai Sri Maha Ganesha Namaha...

கற்பகாம்பாள்சரஸ்வதிஅலங்காரம்.

Arulmigu Sri Vaasavi Kanniga Parameswari Amman Temple, Pattikkara, Palakkad, Kerala.
Golu Mandapa Alangaram, - Siddhi, Buddhi sametha Sayana Vinayakar.
Golu in Srirangam Temple..

Ancient miniature Hindu shrine of reclining Vishnu from Nepal

ஸ்ரீ நவதுர்க்கைகள்

ஸ்ரீ நவதுர்க்கைகள்

 மகிஷாசுரனின் அக்கிரமங்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் ஸ்ரீ துர்க்காதேவி. அவளை நவதுர்க்கை என்று பக்தர்கள் போற்றி துதிக்கின்றனர். அந்த நவதுர்க்கைகள்: 

1. சாந்தி துர்க்கை, 2. சபரி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சூலினி துர்க்கை, 6. வன துர்க்கை, 7. லவண துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. தீப துர்க்கை என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது இயல்பு பற்றிய விவரம் வருமாறு:- 

1. சாந்தி துர்க்கை 

தட்சன் தான் செய்த யாகத்தின் போது சர்வேஸ்வரனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இதனால் சிவன் சினம் கொண்டு எழுந்தார். அந்த சினத்தை சாந்தி செய்தவளும் நோய் நொடிகளை ஒழித்து அமைதி அளிப்பவள் சாந்தி துர்க்கை எனப்படுகிறாள். 

2. சபரி துர்க்கை 

வில்லவன் அர்ச்சுணனுக்குப் பாசுபதம் வழங்க ஈஸ்வரமூர்த்தி வேடனாய் உருவெடுத்துச் சென்றார். அப்போது துர்க்கை வேட்டு வச்சியாக மாறி ஆசி வழங்கினாள். இதனால் அவள் சபரி துர்க்கை எனப்படுகிறாள். 

3. ஜாதவேதோ துர்க்கை 

முருகப்பெருமான் ஜனனத்தின் போது ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்துத் தோன்றிய அக்கினிப் பொறிகளாக விழுந்தார். அந்த தீ பொறிகளை வாயு பகவானும், அக்கினி தேவனும் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அப்படி அவர்கள் செயல்பட அவர்களுக்கு மகாசக்தியினை அளித்தவள் என்பதால் ஜாதவேதோ துர்க்கையென போற்றி துதிக்கப்படுகிறாள். 

4. ஜ்வாலா துர்க்கை 

பண்டாசுரன் என்னும் அரக்கணை ஒழிக்கப்போரிடும் போது, தனது படைகளைக் காக்க வேண்டியமையால் தானே தீப்பிழம்பு வடிவமாக தோன்றிமையினால் ஜ்வாலா துர்க்கை எனப்படுகிறாள். 

5. சூலினி துர்க்கை 

திரிபுரத்தை எரிக்கச் சிவபெருமான் வெகுண்டெழுந்து சென்றார். அப்போது அவருடன் துர்க்கை சூலாயுதத்தை ஏந்திச் சென்றமையால் சூலினி துர்க்கை என்று போற்றுகின்றனர். 

6. வன துர்க்கை  

நாம் செய்யும் பாவங்களை அழித்து ரட்சிப்பவளை வன துர்க்கை என கூறலாம். பவாரண்ய குடாரிகா என்ற லலிதா சகரஸ்ரநாமம் இதனை உணர்த்துகிறது. அஞ்சான வாசம் முடிந்ததும் பாண்டவர்கள் வன்னிமரப் பொந்திலிருந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அந்த மரத்தடியில் வைத்துப் பூஜித்தார்கள். 

வன துர்க்கையாகவும், எல்லாச் சங்கடங்களையும் அடக்கி ஒடுக்கி நன்மை தருபவளாகவும் விளங்கும் தேவியை ஒன்பது நாட்களும் வழிப்பட்டனர். தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். 

விஜயம் தரும் தசமி என்பதாலும் அர்ச்சுணனாகிய விஜயனால் மிகவும் பயப்பக்தியுடன் பூஜிக்கப்பெற்றது என்பதாலும் இது விஜயதசமி என்று பெயர் பெற்றது. இதனை விஜய நவராத்திரி என்றும், வன்னிய நவ ராத்திரி என்றும் வன துர்க்கா நவராத்திரி என்றும் சொல்கிறார்கள். 

7. லவண துர்க்கை 

ராமபிரான் வாழ்ந்த காலத்தில் லவணாசுரனின் அக்கிரமத்தை அழிப்பதற்கு சத்துருக்கனனுக்கு துர்க்கை அருள் புரிந்தாள். இந்த உதவியால் அவள் லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள். 

8. ஆசுரி துர்க்கை 

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும், அசுரர்களை மயங்கச் செய்து, அந்த அமிர்தத்தை தேவர்களைப் பருகிடச் செய்யும் ஆற்றலை திருமாலுக்கு துர்க்கை வழங்கினாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள். 

9. தீப துர்க்கை 

குண்டலினி யோகியின் தவத்தை மெச்சி ஞான ஒளியைக் காட்டியமையால் தீப துர்க்கை என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஒன்பது நாமங்களில் அன்னை துர்க்கா தேவி பிரதிபலித்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பேரருள் தந்து காத்து ரட்சிக்கின்றாள்
.

Saphala Ekadashi !!



 King Yudhishtira requests Lord Krishna to describe the importance of Saphala Ekadashi - which falls on the dark fornight in the month of Pausha.  King Yudishtira enquired Lord Krishna about who should be worshipped and how it should be observedon this auspicious day .


The Supreme Lord Krishna replies to Yudhishtira about the Saphala Ekadashi in the month of Pausha - Krishna Paksha Ekadashi.  Lord Krishna reveals the importance of Fasting on the day of Ekadashi as superior than any sacrifices or charity made on this day.  Everyone should observe  fast within their  ability and worship Lord Hari.

On Saphala Ekadashi Lord Narayana is worshipped.  Lord Krishna continues, as Shesha is superior among the Nagas, Ganga is superior among the rivers, Garuda among the birds, Ashwamedha Yaga is superior among all the Yagas,  Brahmin is the superior among the Varnas,  Lord Narayana is superior among the deities and fasting on an Ekadashi day is superior among any other day.  The   prominent Kings who were born in the Bharata Varsha were strict observers of Ekadashi.


 As a part  of observance of Saphala Ekadashi, the devotee worships Lord Narayana with fresh fruits, flowers, incense,  betel leaf and nuts, Ghee Lamp.  The devotee should observe fast ,  compulsorily should avoid any grains and keep awake all night. 

There was a city called Champavathi, which was ruled by a righteous King Mahishmata.  He had four sons and the eldest among them was Lumpaka.  He was characterless, engaged in all sinful deeds, having illicit relationships and gambling made him to lose all his wealth.  Finally, the King Mahishmata had to exile his son - Lumpaka to forest.   Though he was exiled from the Kingdom, during the day he wandered in the forest and hunted animals and during night hours, he entered the city and looted the wealth of the people.  The people of the Champavathi could not do much either.  It was his fate which made him run away from all the luxuries and pleasures and deserted him as a  forest-deweller engaged in all sinful activities. 

Lumpaka chose the Banyan tree as his shelter place. This is one of the auspicious trees,  Lord Vishnu dwells in them.  In due course, Saphala Ekadashi arrived.  On the eve of Ekadashi during the night hours  because of  severe cold and battered clothes he had to keep awake the whole night.  The severe cold almost killed him  and dropped him into an unconscious state.  When the  midday of Saphala Ekadashi arrived, he managed to rise from the ground . Stumbling and limping, he managed to enter into the forest.  Tired of hunger and thirst, he could not kill even a single animal.  He collected fruits which were available  within his reach and returned to his shelter under the Banyan tree.   By the time the sun had almost set.  He kept the fruits on the ground and started weeping like a mad man.  He sobbed calling Lord Madhusudhana and offered the fruit.  The Supreme Lord accepted the fruits offered by him and the merits Lumpaka achieved was he regained his Kingdom.


On the very next day of Ekadashi, Lumpaka was surprised to see a horse standing in front of him and a  heavenly voice  instructing him to move towards his Kingdom.  His family and his people were looking forward to receive him with all the dignities.  As the merit he acquired from fasting a Saphala Ekadashi , he regained his Kingdom and transformed into a handsome prince once again.  He had become the True devotee of Lord Hari.  With the blessings of Lord Hari - Lumpaka ruled the Kingdom wisely for many years.  He had a beautiful wife and a virtuous son.  At his old age, King Lumpaka entrusted the Kingdom and all its wealth to his son and turned himself into a forest-dweller as his own father.  He spend the rest of his life in the service of The Supreme Lord by controlling mind and sense and finally attained the Supreme Abode of Lord Hari.


Lord Krishna continued, whoever observes the Saphala Ekadashi with utmost devotion and faith would be liberated from the cycles of birth and death.  Whoever listens to the glories of  Ekadashi Mahathmyam would achieve the merits of Rajasuya Yagna and will attain Moksha.


 Jai Sriman Narayana !!  

ARUL THARUM AMMAN.

a



Jaya Jaya Sankara Hara Hara Sankara !!



Thiruvanaikka Sri Akilandeshwari Amman!!    



 

Thirumayilai Sri Karpakambal!!



அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி






அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி அருள் மிக உயர்ந்தது. அன்னை ஆதி பாரசக்தி அம்சம்  உடையவர்கள். அன்னையின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம். அன்னை எவ்விடத்தில் அருள் எவ்விடத்தில் உள்ளதோ அவ்விடதில் சுக்கிரன் அருள் பரிபூரனமாக இருகும். அன்னையை உபாசனை செய்தால் அவருக்கு பணம் கஷ்டம் ஏற்படாது.

தினம் அன்னை மூலமந்திரத்தை உச்சரிதால் அன்னை நம் கனவில் வந்து  அருள் புரிவார்கள். 

மனோபலம் தரும் நவராத்திரி வழிபாடு!


செவ்வாயும் வெள்ளியும் அம்மனுக்கு உகந்த நாட்கள் என்போம். நகரேஷு காஞ்சி எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் காஞ்சி மாநகரில், வருடம் 365 நாட்களுமே காமாட்சி அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது. நம் வீட்டில் ஒரே ஒரு நாள் அம்மா இல்லாமல், அவளின் நடமாட்டம் இல்லாமல் போனாலும், அந்த நாள் களையிழந்து அல்லவா காணப்படுகிறது! அதனால்தான், காஞ்சியை ஆட்சி செய்யும் காமாட்சியின் செங்கோல் வருடம் முழுவதும் ஓங்கி உயர்ந்து ஆட்சி செலுத்துகிறது.
கிழமைகளும் பண்டிகைகளும், விசேஷங்களும் விழாக்களும் நமக்காகத்தான்! நவராத்திரி எனும் ஒன்பது நாள் விழாவும், அதையடுத்து பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும் பண்டிகையும் நாம்  வணங்கி, பலன் பெற்று, பலமுடனும் நலமுடனும் வாழ்வதற்காகவே உண்டாக்கப்பட்ட கோலாகலங்கள்.
காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்திலும், நவராத்திரி விழாவானது வெகு விமரிசையாக நடைபெறுகிறது. புண்ணியம் நிறைந்த மகாளய அமாவாசை அன்று, வாராஹி சந்நிதியில், பகலில் சண்டி ஹோமம் நடைபெறும். இரவில், ம்ருத்சங்க்ரஹணம் வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். அடுத்த நாளிலிருந்து சாரதா நவராத்திரியின் ஒன்பது நாள் விழா, விமரிசையாக நடைபெறும். அந்த நாட்களில், பகலில் ஸ்ரீசக்கரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இந்த பூஜையைத் தரிசிப்பது, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து, ஐஸ்வரியங்களை அள்ளித் தரக்கூடியது என்பார்கள்.
அதையடுத்து, கோயிலின் நவராத்திரி மண்டபத்தில், தினமும் இரவு வேளையில் அம்பாள் உற்ஸவர் புறப்பாடாகி, பிராகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருவார். தினமும் சூரசம்ஹாரமும், பிராகாரத்தில் உலா வருவதும் நடைபெறும். எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளில், உற்ஸவர் காமாட்சி அம்பாளுடன் துர்கையும் பிராகாரத்தில் உலா வருவார். இந்த நாளில் காமாட்சியையும் துர்கையையும் ஒருசேர தரிசித்தால், சத்ருக்கள் பயம் நீங்கும்; எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
துர்காஷ்டமியுடன் சூரசம்ஹாரமும் பூர்த்தியாகும். ஆனால், அம்பாள் புறப்பாடு என்பது விஜயதசமி நாளில் நிறைவுறுகிறது. சூரனின் தலையுடன் ஒருநாள், மகிஷாசுரனின் தலையுடன் ஒருநாள் என அம்பாள் காட்சி தருவதைக் காண, காஞ்சி புரம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
”அம்பாளைப் பற்றி பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில், ஆதிசங்கரர் அருளிய ‘செளந்தர்ய லஹரி’யும், மூக கவி எழுதிய ‘மூக பஞ்ச சதீ’யும் ஈடு இணையற்றவை. கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியை, கண்ணால் காணவும் மனதால் அனுபவிக்கவும் செய்கிற சக்தி, செளந்தர்ய லஹரிக்கும் மூக பஞ்ச சதீக்கும் உண்டு.” என்கிறார் காஞ்சி மகான்.
மூகன் என்றால், வாய் பேச இயலாதவன் என்று அர்த்தம். அப்படி, வாய் பேச முடியாமல் இருந்த பக்தர் ஒருவர், காஞ்சியில் குடிகொண்டிருக்கும் காமாட்சியின் கிருபா கடாட்சத்தையும், அவளின் தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிர்த சாகரம்போல் ஐந்நூறு ஸ்லோகங்களைப் பொழிந்து தள்ளினார். அதையே ‘மூக பஞ்ச சதீ’ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து. ‘சத’ என்றால் நூறு. மூக பஞ்ச சதீயை எவரொருவர் படித்துப் பாராயணம் செய்து, காமாட்சி அம்பாளை ஆராதிக்கிறாரோ, அவர்கள் ஞானத்திலும் செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள்!
குறிப்பாக, நவராத்திரி வேளையில் காமாட் சியை செளந்தர்ய லஹரியைப் பாடியும் மூக பஞ்சசதீயைச் சொல்லியும் வழிபடுங்கள். எல்லா வளமும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, துர்காஷ்டமி நாளில், நவராத்திரியின் எட்டாம் நாளில், தரிசியுங்கள். மனோ பலம் பெருகும். மங்கல நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும்.
”அம்பாள் கறுப்பா, சிவப்பா? மூகர், இரண்டு நிறத்தையுமே சொல்லியிருக்கிறார். அதாவது குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளக் கொடி என்றும், செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதையடுத்து, கருநீலக் காயாம்பூ போல் ஒளிர் கிறாள் என்றும் தெரிவிக்கிறார்’ என விளக்குகிறார் காஞ்சி மகான். மேலும் தொடர்ந்து ”ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், ‘ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார். நல்லதுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தான மாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்மவஸ்து. பரப்பிரம்மமாக செயலின்றி இருந்தால் போதாது என்று, அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்கு அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு, உலகைக் காக்கும் கருணையால் அருணவர்ணம் கொண்டு, வெற்றியோடு பிரகாசிக்கிறது. ஜகத் த்ராதும் சம்போ. ஜயதி கருணா காசித் அருணா. சூர்யோதயத்துக்கு முன்னே கிழக்கில் பரவுகிற சிவப்புதான் அருண நிறம். அருண நிறம் என்றால் கருணை நிறம். அதுவே அம்பிகையின் நிறம்” என்கிறார் காஞ்சி மகான்.
காஞ்சியில் குடிகொண்டிருப்பவள், கருணையே வடிவானவள். நூறு கோடி சூரியப் பிரகாசத்துடன் திகழ்பவள். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் விடியலைத் தந்து, வாழ்வில் ஒளியேற்றுபவள். வானத்து நிறமான நீல நிறத்திலோ, வானத்தில் பிரகாசிக்கும் சூரியச் சிவப்பு வர்ணத்திலோ, பூமிக்குப் போர்வையாய்த் திகழ்கிற வயல்களின் நிறமான பச்சை நிறத்திலோ… காமாட்சி அன்னைக்குப் புடவை சார்த்தி வழிபடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிரகாசத்தையும் அழகையும் பசுமையையும் தந்து, உங்களை ஜொலிக்கச் செய்வாள் பராசக்தி.

Friday, September 26, 2014

1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.


 உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.



தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.

5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்

பூசை அறை 

மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும்.
பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி
அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால்
அவரவர்கள் தங்களிற்கு
பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி,
 மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால்
அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு.
அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு,
தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும்.
சாம்பிராணிபுகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்

pancha muga vinayagaradi-sankara1
1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
     புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
     ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
     கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.


நாம் மேலே காண்பது கணேச பஞ்சரத்ன துதியாகும். இதனை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்.  இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.


கணேச பஞ்சரத்ன துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் கம் கணபதயே நமஹ

தோஷங்கள் போக்கும் சுதர்சனர் அஷ்டகம்

sudarsanar

ப்ரதிபட ஸ்ரேணிபீஷணவரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
நிகில துஷ்கர்ம கர்ஸநநிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஸூபஜகத்ரூபமண்டநஸூரகணத்ராஸகண்ட
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷிதபஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
நிஜபத ப்ரீத ஸத்கணநிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவநிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரணஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜரப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹபடுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டிதபரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
புவநநேத்ர த்ரயீமயஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மயநிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமயஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டிதஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பகவிபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ப்ரதிமுகாலீட பந்துரப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி  மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
தநுஜவிஸ்தார கர்த்தநஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தநபஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரமஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஆக்கம்: ஸ்ரீ தேசிகர்
நாம் மேலே காண்பது ஸ்ரீதேசிகர் அருளிய சுதர்சனர் அஷ்டகம் ஆகும்.  இதனை தினமும் பாராயணம் செய்து வந்தால் சுதர்சனர் அருளால் எல்லா தோஷங்களும் நீங்கி 16 பேறுகளும் கிட்டும்.
ஸ்ரீசுதர்சனர் அஷ்டகத்தின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

2014 ம் வருட தேய்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்


Theipirai Thrayodhasi - 2014
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

2014 ம் வருட வளர்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்


Valarpirai Thrayodhasi - 2014
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPBONwyuZU9qCPeXainQOXkbJAVPUFdp2wrW-a5wQKpox5KabuBp-_oBAXXaw428WzCXOX13duyiPDu2CoI3YDPXYH6qd7i0WmIpebJkc0DpTuFj7wLbUStOSEa__lnwvnuoYF5TVkuFY/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg 



தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான் 
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.


ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்