Wednesday, October 29, 2014

THIRUPATHI WONDER - பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருமகள் துதி!அகத்தியர்  சொன்ன திருமகள் துதி கிழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுவதும்  படித்து பயனடையுங்கள்   1564 முதல் 1604 ம் ஆண்டு வரை தென் பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இப்பாடல்களை தினந்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை அடைந்து அச்செல்வத்தை நல்ல முறையில் துய்ப்பர். அதனால் விளையும் பயனையும் துய்ப்பர். இப்பாடலானது வீட்டிலே இருந்தாலே செல்வம் கொழிக்கும். இது அனுபவப்பூர்வமான உண்மை. மேலும் அன்னை திருமகளே அறுதியிட்டு கூறியிருக்கிறாள். ஆகவே நம் வாசகர்கள் இந்த பாடலை கண்ணென போற்றி பாதுகாக்கக் வேண்டும்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பாடலை தனியாக பிரிண்ட் அவுட் எடுத்து, அதை லேமினேட் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து வணங்கி வாருங்கள்.

நல்ல மன மாற்றத்துடன் திடமான தன்னம்பிக்கையுடன் நம் குறைகளை களைந்து இப்பாடலை பக்தியுடன் பாடி வந்தால் திருமகள் அருள் தருவாள் 

உங்கள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒரு ஊரில் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பிரார்த்தனை செய்ய ஊரே திரண்டு நின்றபோது ஒரு சிறுமி மட்டும் கையில் குடையோடு வந்தாளாம்.

“ஏன்?” என்று கேட்டதற்கு, “சாமிகிட்டே மழை வேணும்னு பூஜை பண்றோம். அப்ப மழை வந்துட்டா, நனைஞ்சுட மாட்டோமா? அதான்!’ என்று அந்தச் சிறுமி சொன்னாளாம். சிறுமியின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டி இறைவன் மழை பொழிவித்தானாம்.

அந்தச் சிறுமியின் நம்பிக்கை போல உங்கள் நம்பிக்கை இருக்கவேண்டும். பிறகென்ன…? அருள்மழை நிச்சயம்!

சிறப்பு மிக்க அந்த பாடல் வருமாறு :

அகத்திய மாமுனி இயற்றிய திருமகள் துதி!

1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்

பொருள் : மூன்று உலகங்களுக்கும் துன்பத்தைச்செய்த வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்.

2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்…

பொருள் : “வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே! எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும் தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!”

3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள் அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..

பொருள் : “திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே! தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!” என்று வணக்கம் செய்யலானான்.

4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ…..

பொருள் : இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?

5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்….
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே…..

பொருள் : அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!

6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா…..

பொருள் : செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!

7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
“நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவன் மருவல் செய்யாள்….”

பொருள் : என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) “நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் கெடாத பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் வறுமையைக் கொடுக்கின்ற மூதேவி அவ்விடத்தில் பொருந்துதலைச் செய்யமாட்டாள்”.

அகத்தியர் சொன்ன திருமகள் துதி கிழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுவதும் படித்து பயனடையுங்கள் 1564 முதல் 1604 ம் ஆண்டு வரை தென் பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இப்பாடல்களை தினந்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை அடைந்து அச்செல்வத்தை நல்ல முறையில் துய்ப்பர். அதனால் விளையும் பயனையும் துய்ப்பர். இப்பாடலானது வீட்டிலே இருந்தாலே செல்வம் கொழிக்கும். இது அனுபவப்பூர்வமான உண்மை. மேலும் அன்னை திருமகளே அறுதியிட்டு கூறியிருக்கிறாள். ஆகவே நம் வாசகர்கள் இந்த பாடலை கண்ணென போற்றி பாதுகாக்கக் வேண்டும்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பாடலை தனியாக பிரிண்ட் அவுட் எடுத்து, அதை லேமினேட் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து வணங்கி வாருங்கள்.

நல்ல மன மாற்றத்துடன் திடமான தன்னம்பிக்கையுடன் நம் குறைகளை களைந்து இப்பாடலை பக்தியுடன் பாடி வந்தால் திருமகள் அருள் தருவாள் 
உங்கள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒரு ஊரில் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பிரார்த்தனை செய்ய ஊரே திரண்டு நின்றபோது ஒரு சிறுமி மட்டும் கையில் குடையோடு வந்தாளாம்.

“ஏன்?” என்று கேட்டதற்கு, “சாமிகிட்டே மழை வேணும்னு பூஜை பண்றோம். அப்ப மழை வந்துட்டா, நனைஞ்சுட மாட்டோமா? அதான்!’ என்று அந்தச் சிறுமி சொன்னாளாம். சிறுமியின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டி இறைவன் மழை பொழிவித்தானாம்.

அந்தச் சிறுமியின் நம்பிக்கை போல உங்கள் நம்பிக்கை இருக்கவேண்டும். பிறகென்ன…? அருள்மழை நிச்சயம்!

சிறப்பு மிக்க அந்த பாடல் வருமாறு :

அகத்திய மாமுனி இயற்றிய திருமகள் துதி!

1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்

பொருள் : மூன்று உலகங்களுக்கும் துன்பத்தைச்செய்த வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்.

2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்…

பொருள் : “வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே! எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும் தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!”

3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள் அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..

பொருள் : “திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே! தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!” என்று வணக்கம் செய்யலானான்.

4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ…..

பொருள் : இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?

5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்….
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே…..

பொருள் : அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!

6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா…..

பொருள் : செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!

7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
“நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவன் மருவல் செய்யாள்….”

பொருள் : என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன்

 திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்:

 “நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். 

இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் கெடாத பெரிய போகங்களை நுகர்வார்கள். 

இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் வறுமையைக் கொடுக்கின்ற மூதேவி அவ்விடத்தில் பொருந்துதலைச் செய்யமாட்டாள்”.
அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்

அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
நட்சத்திர தீபம் என்பது தீபாவளி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமைத் தினத்தில் இருந்து பவுர்ணமி வரை, அதாவது உத்தான தவாதசிக்குப் பிறகு வரும் பவுர்ணமி வரை தினமும் ஏற்ற வேண்டிய தீபம் ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றுவது கூடாது. 

வீட்டிற்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும். வெளியில் துளசி பிருந்தாவனம் இருந்தால் பிருந்தாவனத்திற்கு முன்பு ஏற்றலாம். அல்லது திறந்த வெளி முற்றம் அல்லது திண்ணையில் ஏற்றலாம். 

வெளி முற்றம், திண்ணை அல்லது துளசி பிருந்தாவனத்தின் முன்பு போன்ற இடங்கள் எதுவும் சரியாக அமையவில்லை என்றால், நாம் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு தட்டிலோ அல்லது பலகையிலோ தீபங்கள் ஏற்றி வெளியில் வைக்கலாம். மாடியிலும் ஏற்றலாம். 

விளக்குகள் ஏற்றும் இடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து செம்மண் கோலம் இட்டு அதன் மேல்தான் ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்குகளே போதும். பித்தளை, வெண்கலம் போன்ற விளக்குகளில்தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

ஆனால் எவர்சில்வர் விளக்கு கூடாது. இந்த தீபங்கள் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். அதாவது வெளிச்சம் வந்து நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். ஆகையால் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்ற வேண்டும். 

இந்த நட்சத்திர தீபம் என்று கூறப்படும் தீபம் தினமும் 27 ஏற்ற வேண்டும். தீபம் முடியும் பவுர்ணமி அன்றோ அல்லது சாத்யப் பட்ட சந்தர்பத்திலோ தீபதானம் கொடுக்க வேண்டும்.

Friday, October 24, 2014

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா.திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா.ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே;
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே;
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே;
சித்தத்துள் தித்திக்கும் தேனே;
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே;
அம்பலம் ஆடரங்காக;
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை;
தொண்டனேன் விளம்புமா விளம்பே!
  
விளக்கம்:பிரகாசமாக ஒளிவீசும் விளக்கே;

அழிவு அற்ற ஒரு பொருளே;

சாதாரணஉணர்வால் அறியமுடியாத 

உணர்வே;தெளிவான பளிங்கு 

விடும் ஒளிக்கதிர்கள் சேர்ந்து உரு

வான மணிக்குன்றே;

சிந்தையில் அல்லது மனத்தில் 

தேனாய் இனிப்பவனே;அன்பு 

பெருகும் மனதில் ஆனந்தத்தை 

தரும் கனியே;தில்லை 

அம்பலத்தை நடனம் செய்யும் 

அரங்காக கொண்டுநீ ஆடும் தெய்வ 

திருநடனத்தை;தொண்டனாகிய 

நான் எப்படிசொல்வதென்று எனக்கு 

சொல்வாயாக.

மந்திரத் திருப்புகழ்

மந்திரத் திருப்புகழ்

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’

எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’

எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று

கூறப்படுகிறது

மந்திரத் திருப்புகழ் பாடல்

இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!

மந்திரத் திருப்புகழின் பொருள்

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு,

விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை,

எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும்

இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும்

என்னை வாட்டாத வகையில் முருகா, உனது

திருவடிகளைதந்துஅருள வேண்டும்.

கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் 

அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும்

வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே!

மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின்

மகளான தெய்வயானை மணவாளனே!

திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"நந்தி பலவிதம்

* அம்பர் மாகாணத்தில் நந்தி பகவான் மனித மடிவில் எழுந்தருளி இருக்கிறார்

* கஞ்சனூரில் நந்தியின் முகம் பக்கவாட்டில் திரும்பி உள்ளது

* போரூர் தளத்தில் தாடை உடைந்த நிலையில் நந்தி காணப்படுகிறார்.

*கொருக்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன

* திருமால்பூரில் நின்ற கோலத்தில் நந்தி பகவான் காட்சியளிக்கிறார்

* திற்பரப்பில் நந்தி தேவர் உருண்டைக் கல் வடிவில் காட்சி தருகிறார் 

                  கணபதி ரூபங்கள்

* திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளசங்கரலிங்க சுவாமி--கோமதி அம்மன் கோவிலில் விநாயகர்சன்னிதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் ஒருகையில் நாகப்பாம்பு உள்ளது. இந்த பாம்பு அவரது கால்கள் மற்றும் இருப்பை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.

** ஆந்திர  மாநிலம்  ஸ்ரீ சைலத்தில் கணபதி கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார் மேலும் விநாயகர் பறக்கும் நிலையில் உள்ள சிலையும் இங்கு காண முடிகிறது.

*** மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர் கோவிலில் முன் மண்டபத்தில் வலப்புறம் தூணில்,பூதத்தின் மீது ஏறி போருக்கு புறப்படும் நிலையில் கணபதியின் அபூர்வ சிற்பம் பொறிக்கப் பட்டுள்ளது 

திருமணத் தடை நீங்கும்!
தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் கரையில் அமைந்துள்ளது சிவ, வைணவத் தலமான கபிஸ்தலம். இவ்வூருக்கு அருகே உள்ள கீழ கபிஸ்தலத்தில் அருள்புரிகிறார் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர்.

பழைமையான இத்திருக்கோயிலின் உள்ளே ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், இரட்டை விநாயகர், காசிவிஸ்வநாதர், சனீஸ்வரர், பைரவர் ஆகிய சந்நிதிகளும், கோயில் வெளிப்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன. உற்ஸவ தினங்கள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. காமாட்சி அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். 

தற்போது இக்கோயிலில் ராஜகோபுரம் அமைப்பது உள்ளிட்ட பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 மேலும் தகவலுக்கு : 98436 52401/94437 01223.

அமைவிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில் கீழகபிஸ்தலம் பின்னைமரம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வடக்கே செல்ல வேண்டும்.

இருமனம் காணும் திருமணத்தடை இறையருள் பெற்று இனிதே விலக .....இங்கே வாருங்கள் 

ஆன்மிகக் கேள்விகள் அறிவோம் ...

                                  ஆன்மிகக் கேள்விகள் அறிவோம் ...

அன்றாட வாழ்வில் சில சொற்களை கேட்டிருப்போம் , பிரயோகப்படுத்துவோம் , அனால் அவற்றின் உண்மையான 
பொருள் அறிந்திருப்பதில்லை .

இங்கே சில இவன் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்

1. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு என்ன பெயர்?

திரவிய சுத்தி.

2. வாசனை தீர்த்தத்தை ஈசுவர பிரீதிக்காக சமர்ப்பித்தலுக்கு என்ன பெயர்?

பாநீயம்

3. ஆன்மாவுக்குரிய ஞானமுடைமையை ராமானுஜர் அழைப்பது எவ்வாறு?

பக்தி ஞானம்

4. பகவான் கிருஷ்ணனின் உபதேசமாக இருப்பது எது?

கடமையை செய்; அதன் பலனில் பற்று வைக்காதே

5. "நல்லவர்க்கில்லை நாளும் கோளும்' என்று உரைத்தவர் யார்?

திருஞானசம்பந்தர்.

6. திருஞான சம்பந்தரை குறிக்கும் பாராட்டு மொழிகள் எவை?

ஞானத்திருவுரு, நான்மறையின் தனித்துணை.

7. தேவாரத்தின் பொருள் என்ன?

தேவனுக்குரிய மாலைகள்.

8."காரி உண்டிக் கடவுள்' என்று புறநானூற்றுத் தொடரில் வருகின்ற "கடவுள்'

சிவபெருமான்.

9. கோயில் வடிவமைப்பில் வேசர என்பது என்ன?

அரை வட்ட வடிவ விமானம்.

10. மந்திரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சப்தப் பிரம்மம் அல்லது அட்சரப் பிரம்மம்.

சம்ப்ரதாயம் தெரிந்துகொள்ளுங்கள் , புரிந்துகொள்ளுங்கள் பொருள்

லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்புலிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு

அவசியத்தின்போதெல்லாம்அவதரிக்கின்றபரம்பொருளின் அவதாரங்கள்எண்ணிலடங்காது.என்றாலும்,ஒருசிலமிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன.இவற்றுள்மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர். லிங்கமே சிவபெருமான் தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தி என்று போற்றுகிறோம். அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளவில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே. 

இதுபோன்றநிலையைத்தான்லிங்கோத்பவர்கதையிலும்காண்கிறோம். பரம்பொருள் ஒன்றே ஆயினும்,நாம்,அதைப்பெரும்பாலும், பலவாகவேகருதிஅறியாமையில்உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான். உதாரணமாக,

சிவனும்சக்தியும்:அர்த்தநாரீஸ்வரராகவும்,சிவனும்மாலும்ஒன்றிசங்கரநாராயணராகவும்,இப்படிப்பலதிருவுருவங்களையும்ஏற்றிருக்கிறான்.இதுபோலவேமும்மூர்த்திகளும்சேர்ந்து நடத்திய திருவிளையாடலால்உருவானபுதியமூர்த்தியேலிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) காணலாம். ஆலய நிர்மாண நூல்களை உற்று நோக்கினால், எந்த ஆலயமுமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லாதெய்வங்களையும்ஒரேகருவறையில் வைக்க இயலாது 
என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக் கின்றனர்.இதனால்தான்மாலும், பிரமனும்இல்லாதசிவாலயமுமில்லை.ஆண்தெய்வமில்லாத பெண்சக்திஆலயமுமில்லை.மும்மூர்த்திகளின்அருளையும்ஒரேதிருவுருவில்வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது.

அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றிடுவதும், சூடம் ஏற்றிடுதலுமே மிக முக்கியமான வழிபாடாகும். அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக லிங்கத்துள்ளிலிருந்து வெளிப்பட்ட லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.சிவனுக்குள் ஒரு சிவன் என்பதே , இவனுக்குள் அவன் இருப்பதாம் 

மண வாழ்க்கை சிறக்க

பலனை எதிர்பார்த்து இறைவனை வேண்டுதல் கூடாது எனினும், நம் பக்திக்கேற்ற பலனைத் தருதல் பகவானின் இயல்பு. இதன் காரணத்தாலேயே "பக்தி செய்து உய்யுங்கள்' என்று பெரியோர் கூறினர்.

திராவிட வேதம் என்றும் தமிழ்மறை என்றும் முன்னோர் வகைப்படுத்திய நம்மாழ்வாரின் பாசுரங்களை மனமுருகிச் சொன்னால் அதற்கான பலன் நாம் வேண்டாமலேயே நம்மை வந்தடையும். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் எட்டாம் பத்து, பத்தாம்
திருவாய்மொழியில் வரும் பாசுரம் இது. இதில், "பெருமானின் புகழ்பாடும் இந்தப் பத்து பாசுரங்களையும் பாடவல்லவர்க்கு மண வாழ்க்கை சிறக்கும்' என்கிறார் நம்மாழ்வார்.

""நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே''

- ஆழ்வார் நம்மைவிட்டு நம் அடியார்களைத் தேடி ஓடுகிறாரோ என்று வெறுப்படையாமல், நம்மிடத்திலே இவர் வைத்த அன்பு நம் தொடர்புடைய அடியார்கள் இடத்திலும் பெருகுவதே என்று மிக உகந்தார் எம்பெருமான். வேதம் போலே தானே தோன்றாது, இந்தத் திருவாய்மொழியானது ஆழ்வாரின் திருவாக்காய் வெளியாகி மேலும் சிறப்பு பெற்றுவிட்டது என்பர் பெரியோர்.

பாசுரத்தின் கடைசி அடியில், இத்திருவாய்மொழியைக் கற்பதால் சொல்லப்படும் பலன், சம்ஸார வாழ்க்கையாக இருக்கின்றதே, இது சரிதானா என்று சிலர் விவாதித்தனர். அதற்கு பூர்வாசாரியர்கள், கூரத்தாழ்வான், அனந்தாழ்வான் போன்ற ஆசார்யர்களைப் போல், குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே, பகவத் பாகவத கைங்கரியத்துக்கு துணைபுரியும் இல்லாளும் புத்திரர்களுமாய்ப் பெற்று, பகவத் கைங்கரியம் மேன்மேலும் சிறக்கும்படியாக இருக்குமே என்று விளக்கினர். இதனாலேயே நல்ல பதத்தால் மனை வாழ்வீர் என்றார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தை விளக்க ஒரு சம்பவத்தைச் சொல்
வார்கள்.

ஸ்ரீராமானுஜர் ஒருமுறை திருவனந்தபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்டார். பரிவாரம் புடைசூழ அவர் திருக்கோஷ்டியூரில் செல்வநம்பி என்பவரின் இல்லத்துக்குச் சென்றார். அப்போது செல்வநம்பி வெளியூர் சென்றிருந்தார். வருந்தி அழைத்தாலும் எளிதில் வாராத உத்தமர்கள் வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உணவு சமைத்தாக வேண்டும். இல்லத்தில் விதை நெல்லைத் தவிர வேறில்லை. சிறிதும் சஞ்சலம் கொள்ளாது, விதை நெல்லைச் சமைத்து, ஸ்ரீராமானுஜர் மற்றும் உடன் வந்தோருக்கு உணவிட்டார் செல்வநம்பியின் மனையாள் நங்கையார். மறுநாள் இல்லம் வந்த செல்வநம்பிகள், விதை நெல்லைக் காணாது, காரணம் கேட்க, பரமபதத்திலே நெல்லை விதைத்துவிட்டேன் என்றாராம் நங்கையார். இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை, ஆழ்வாரின் மங்களா சாசன பலத்தினாலே வந்ததன்றோ! அருகில் நீ இன்றேல் வணங்குவரோ...?
சிவனும் சக்தியுமாய் சேர்ந்து பொலிகின்ற நிலையை வணங்குதலையே தலையாகக் கொண்டவர்கள் நம் பக்தர்கள். சக்தி உடன் இல்லாது சிவபெருமானை நெருங்க மாட்டார்களாம்.

இவ்வாறு "அபீதகுசாம்பாள் ஸ்தவத்தில்' அப்பய்ய தீட்சிதர் கூறுகிறார். அபீதகுசாம்பாள் ஸ்தவம் 6 வது சுலோகத்தில், "கழுத்திலே விஷம். ஜடையிலோ நஞ்சைக் கக்கும் கொடிய பாம்புகள். பக்கத்திலோ பயத்தை ஏற்படுத்துகின்ற பூத நாயகர்களான கணங்கள். இத்தகைய தோற்றத்தில் திகழும் அருணகிரி நாதனை... ஹே தாயே அருகில் உன்னுடைய சாந்நித்தியம் இல்லாவிட்டால் யார்தான் போய் வணங்குவார்கள்?' என்று பாடுகிறார் அப்பய்ய தீட்சிதர்.

விரும்பிய மணவாழ்க்கை அமைய

விரும்பிய மணவாழ்க்கை அமைய... ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதி
திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியே பெரியாழ்வாரின் குரு, தெய்வம் எல்லாம். வடபத்ர சாயிக்காகவே மிகப்பெரிய நந்தவனம் அமைத்து பூக்கட்டி, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார் பெரியாழ்வார். கோதையும் அந்தக் கைங்கர்யத்தில் பங்கு கொண்டாள். நூற்றியெட்டு திவ்ய தேசப் பெருமாளின் வைபவத்தையும் தந்தையிடம் கேட்டு வளர்ந்தாள் ஆண்டாள். அரங்கனின் குழல் அழகு, வாய் அழகு, கொப்பூழில் எழும் கமலப் பூவழகு மற்றும் கண்ணழகில் லயித்து வளர்ந்தாள். அரங்கன் மீதே ஆசை கொண்டாள்.

தந்தை பெரியாழ்வார், பெருமாளை வாழ்த்தி பல்லாண்டு பாடினார். மகள் கோதையோ, பெருமாளையே துயில் எழுப்பினாள். இந்த ஆளுமை குணத்தால்தான் கோதை ஆண்டாள் ஆனாள்.

ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆனாள்... எவ்வாறு? நந்தவனக் கைங்கர்யம் செய்துவந்த பெரியாழ்வார், மாலைகளைக் கட்டி வடபெருங்கோயிலுடையானுக்கு அணிவிப்பார். ஒருநாள் அவர் சூட்டிய மாலையில் நீளமான தலைமுடி. அதைக் கண்டு வருத்தமுற்ற ஆழ்வார், மறுநாள் அந்த மர்மத்தைக் கண்டறிந்தார். ஆண்டவனுக்குச் சூட்டும் மாலையினை ஆண்டாள் தான் சூடி அழகு பார்த்து, பின்னர் அதனைப் பெரியாழ்வார் சுமந்து செல்லும் பூக்கூடையில் வைத்து விடுகிறாள் என்பது கண்டு அவருக்குக் கோபம். தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.

அன்று இரவு, பெரியாழ்வாரின் கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணம் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கை சொல்லி ஆறாத் துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். "நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது' என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார். தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார் பெரியாழ்வார். அவளை, ஆண்டாள் என்றும், சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் அழைத்தார்.

மணப் பருவத்தே நின்ற பெண்ணைப் பார்த்து, பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, "மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று உறுதியாக உரைத்தாள். "பின் என்ன செய்யப் போகிறாய்?' என்று அவர் கேட்க, "யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்' என்றாள்.
கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வார், நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, "நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்' என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, "நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக' என்று பணித்தான். 

மேலும் பாண்டியன் வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக' என்றருளினான்.

மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப்பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.
பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், "ஆண்டாள் வந்தாள்' "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்' "கோதை வந்தாள்' "திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்' "பட்டர்பிரான் புதல்வி வந்தாள்' "வேயர் குல விளக்கு வந்தாள்' என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.

பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளை ஒலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. "சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே' எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.
காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். "கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர்' என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.
கருவறை விட்டு வந்த பெரியாழ்வாரை, மகளின் பிரிவு வாட்டியது.
"ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனாரே' - என்று வாய் விட்டுக் கதறினார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் திருவரங்கத்தில் வந்து இறங்கிய இடம், மேல அடையவளைஞ்சான் தெருவில், வெளி ஆண்டாள் சந்நிதியாக உள்ளது. இங்கே... அமர்ந்த திருக்கோலத்தில் (மூலவர் விக்கிரகம்) கம்பீரத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள்.

அரங்கன் - ஆண்டாள் இருவரும் கொண்டிருக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் உறையூர் கமலவல்லித் தாயார் ஆகியோருடன் அவரவர் சேர்த்தி நாளில் வருடத்துக்கு ஒருமுறைதான் மாலை மாற்றிக் கொள்கிறார் அரங்கன். ஆனால், ஆண்டாளுடன், அவளது சந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கிறார். அரங்கனை தரிசிக்க வரும்போது, இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளையும் தரிசியுங்கள். மிகுந்த வரப்பிரசாதியான இவளை வணங்கி, விரும்பிய மணவாழ்க்கை அமையப் பெற்றோர் மிக அதிகம்.