Thursday, October 9, 2014பண்டைய  இந்தியாவில்  தலை  சிறந்து  விளங்கிய  ”அவந்தி ”  தேசமே  இன்றைய   நேபாளம் .இங்கு  இமயமலையின் அடிவாரத்தை  ஒட்டினார்போல “ஹரிபர்வதம்”  என்னுமோர்  மலை  உள்ளது .இங்கு  சங்கர தீர்த்தம்  என்னும் பகுதியில்  ” கண்டகி ” நதி  உற்பத்தியாகின்றது . இந்தப்பகுதிதான்  ”சாளக்கிராமம்”‘  என்று  அழைக்கப்படுகிறது . இந்த  ” ஹரி ”  ஷேத்திரத்தில்  உள்ள  சகல  கற்களிலும்,  விஷ்ணுவின்  சகல அம்சங்களும் பொருந்திய  சாளக்கிராம மூர்த்திகள்  புண்ணியகாலங்களில்  தோன்றுவதாகக் கூறப்படுகிறது .
சாளக்கிராமம்:
சாளக்கிராமம்  என்பது  கண்டகி நதியில்  உற்பத்தியாகின்ற ஒருவகையான  அழகிய  தெய்வீகம்  நிறைந்த  கற்களாகும். இவைகள்  நத்தைக்கூடு ,  சங்கு ,  போன்ற
 பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும்  கிடைக்கின்றன .
மஹாவிஷ்ணு தாமாகவே  ,   தங்கமயமான  ஒளியுடன்  திகழும்  ” வஜ்ரகிரீடம் ”   என்ற  பூச்சியின்  வடிவம்  கொண்டு , கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து  ,  அதன்  கர்பத்தை  அடைந்து , அங்கு ,  ரீங்காரமான  சப்தத்தில் ,  இருந்து  கொண்டே தன்  முகத்தினால்  ,பலவிதமான  சுருள்  ரேகையுடன்  கூடிய  பல சக்கரங்களை  வரைந்து  ,  பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை– ( அதாவது  தனது  அவதார  ரூபங்களை )  பல வடிவங்களில்  விளையாட்டாகவே  வரைந்து வெகுகாலத்திற்கு  அங்கேயே  இருந்து  பின்  மறைந்து
 விடுவதாகக்  கூறப்படுகிறது.
இப்பேர்பட்ட  வடிவங்களே  நாம் சேவிப்பதற்கு  உகந்தவையாகும் .இவைகளில்  ஸ்ரீமந்  நாரயணின்  ஜீவருபம் கலந்து இருப்பதாக  ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப  அவற்றின்  பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம் .
1 . நீல  நிறம்—செல்வம் , சுகம் ( ஸ்ரீ  கிருஷ்ண  ஷேத்திரம் )
2 . பச்சை—பலம் , தைரியம்  ( ஸ்ரீ  நாரயண ஷேத்திரம் )
3 .வெண்மை—ஞானம் ,  பக்தி ,  மோட்சம் (வாசுதேவ  ஷேத்திரம் )
4  .கருப்பு—புகழ் , பெருமை ( விஷ்ணு  ஷேத்திரம் )
5 .புகை நிறம்—துக்கம் , தரித்திரம்
6 .மஞ்சள் நிறம்—  வாமன  ஷேத்திரம்
7 . பசும்பொன் ( அ ) மஞ்சள் கலந்த  சிகப்பு  நிறம்—ஸ்ரீ  நரசிம்ம  ஷேத்திரம்
சாளக்கிராமத்தில்  தெய்வீக  சக்தி  இருப்பது  மட்டுமின்றி ,  அவற்றில்  14  உலோகங்கள்
இருப்பதாகக்  கூறப்படுகிறது .சாளக்கிராமம்  விற்பனை   செய்வதை   வாங்குதல்   கூடாது .பிறரால்  பூஜிக்கப்பட்ட  சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் ,  சாஸ்த்திர  ஞானம் பெற்றவர்களிடமிருந்தும்   வாங்குதல்  நன்று .
 
சாளக்கிராமத்தை   பால்  ( அ )  அரிசியின்  மீது  வைத்திருந்து  பின்னர்   எடுத்துப் பார்த்தால் ,  அதன்  எடை  முன்பு இருந்ததை  விடக்  கூடுதலாக  இருக்கும் .
துண்டிக்கப்பட்டிருந்தாலும்  ( அ )  விரிந்து  போனதாய்  இருந்தாலும்
 சாளக்கிராமம்   எங்கு  இருக்கிறதோ  அங்கு  தோசமில்லை .
உடைந்திருந்தாலும்   அதில்   சக்கர  ரேகைகள் இருப்பின் ,  அது  மிகவும்  சிறப்பம்சமாகும் . நேபாளத்தில்  கடைத்தெருக்களில் சாளக்கிராமங்களைக் குவித்து  வைத்து  விற்கிறார்கள் .பெரியவர்களின்  ஆலோசனையின் பேரில்  வாங்குவது  சிறப்பு . இராமேஸ்வரம்  கோவிலிலிருந்து  வடக்கே 5 மைல்  தொலைவில்  உள்ள  ஆஞ்சனேயர்  கோவிலில்  தேங்காயளவு பருமனான  சாளக்கிராமம்  உள்ளது.  இராமேஸ்வரத்தில்  ஏற்பட்ட  ஒரு  புயலின்  போது  கிடைத்த  இந்த சாளக்கிராமத்தில்  நரசிம்ம  மூர்த்தியின்  திரு முகம்  ரேகை  வடிவில்  அமைந்துள்ளது .
<div>
 இராமேஸ்வரம்  செல்லும் அன்பர்கள்   கவனிக்க:
 நேபாளத்தின்  தலைநகரமான  காட்மாண்டுவிலிருந்து   சுமார்  65  மைல்  தொலைவில்  ”தாமோதர்  குண்டம் ” (5,400 மீ உயரத்தில் ) என்னும்   ஓர்  இடம்  உள்ளது .இந்தக்குளம்  10 (அ ) 12  வருடத்திற்கு   ஒருமுறை   பொங்கி ,  சாளக்கிராம  கற்களைக் கக்கும்   என்ற  கருத்தும்   நிலவுகிறது .
 இதுவும்   கண்டகி நதிக்கரையில்தான்அமைந்துள்ளது.சாளக்கிராமத்தின்  வயது  பல  கோடி   ஆண்டுகள்  என்பது  நிரூபணம்  செய்யப்பட்டுள்ளது .அறிவியல்  நோக்கில் ஆராய்ந்தால் ,  சாளக்கிராமங்கள்  ” அம்மோனைட் ”என்ற  வகையைச்சார்ந்த கற்படிவம்  ஆகும் . ஏறத்தாழ 7  கோடியிலிருந்து   20  கோடி  ஆண்டுகளுக்கு  முன்னர் ,  இடை  ஊழிக்காலத்தில்  ( MESOZOIC )   வாழ்ந்து பின்னர் அற்றுப்போய் விட்ட  (fossil stones ) ஒருவித   மெல்லுடலிகள்தான்  ( marine animals-sub-class—ammonoidea ,class–cephalopoda phylum—mollusca  –அடியேன்   விலங்கியல் வகுப்பு   மாணவியாக்கும் ) அம்மோனைட்டுகள்  ( அ ) அம்மோனாய்டுகள்  என்று   அழைக்கப்படுகின்றன .
இந்தியா ,நேபாள் உள்ளிட்ட  பல  நாடுகளிலும்   அம்மோனைட்  படிவங்கள்  கிடைக்கின்றன . ”பாற்கடலில்  பிறந்தாலும்  நத்தைதான்  சாளக்கிராமமோ ”  என்ற  முதுமொழி ,  சேது புராணம்  என்ற  பழைய  நூலில் மேற்கோளாக  எடுத்தாளப்பட்டுள்ளது . இதிலிருந்து  நத்தை  போன்ற  வேறோரு  உயிரின்  படிவமே  சாளக்கிராமம்  என்று  நம்  முன்னோர்கள்    !
அறிந்திருக்கின்றனர் . (  எதைத்தான்  அறியவில்லை அவர்கள் )
இயற்கையில் மிகத்தொன்மையான  அற்புதமான  இந்தச்  சிருஷ்டியில்  நம்  முன்னோர்கள்,   ”இறைத்தத்துவத்தைக் கண்டது நமது  மரபாகும் .  இன்றளவும்  கண்டகி  நதியில்  சாளக்கிராமங்கள்  ஏராளமாகஉற்பத்தியாகி  நேபாளத்து  வீதிகளில் விற்கப்படுவது  கண்கூடு .

No comments:

Post a Comment