Thursday, October 9, 2014

வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் மூன்று நெய் விளக்கு ஏற்றி, முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தி பாடல்களைப் படிக்கவும். திருச்சி- பெரம்பலூர் சாலையில் 30 கி.மீ. தூரத்தில் சிறுகனூர் அருகில் (மேற்கே 4 கி.மீ.) திருப்பட்டூர் சென்று பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபடவும்.

  சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
 காஞ்சிபுரம் அருகில் திருக்காலிமேடு என்ற பகுதியில் சத்யநாதசுவாமி பிரமராம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார். புதன் கிரக பதவி பெற்ற ஸ்தலம். 1500 வருடத்துக்கு முந்திய சிவாலயம். காஞ்சிபுரம் உழவர் சந்தைக்கு கிழக்கு ரோடு. காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு கிழக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் பவளவண்ணர் கோவில் எதிரில் பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் திருக்கோவில் இருக்கிறது. ஆதிசேஷனே இங்கு நாக விளக்காக காவல் காப்பதாக ஐதீகம். நெய் தீபம் ஏற்றி வழிபட தோஷங்கள் விலகும்.

சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் (ஆந்திரா பார்டர்) 40 கி.மீ. தூரம் ஊத்துக்கோட்டை என்ற ஊரின் அருகில் சுருட்டப் பள்ளி என்னும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணா மூர்த்தி அம்பாளை மடியில் தாங்கியவராக தாம்பத்ய தட்சிணாமூர்த்தி யாக விளங்குகிறார். இங்கு சென்று வழிபட, குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் சாந்தமும் உண்டாகும்.


No comments:

Post a Comment