Thursday, November 27, 2014

ஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை.சென்னை - திருவள்ளூர் - திருத்தணிப் பேருந்து வழித்தடத்தில் சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசையில் உள்ள சிறிய, சிறப்பான கோவில். பேருந்துகள் ஆலயத்தின் வாயிலில் நிற்கின்றன.இராஜகோபுரம் தென்திசையில் அமைந்திருக்கிறது. ஈசன் சந்நிதி கிழக்கு நோக்கியது. இராஜகோபுரத்தின் சிறப்பான சுதைச் சிற்பங்கள் ஆலயத்தின் தலவரலாற்றை ஒட்டி அமைக்கப்பட்டது. இறைவனின் கருவறை முன்பு பலிபீடமும், நந்தியும் உள்ளது. கிழக்கில் அழகான திருக்குளம் உள்ளது.  ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்!

இறைவன் - ஒத்தாண்டேஸ்வரர், கைதந்த பிரான், மனோ அணுகுலேஸ்வரர்.

இறைவி - சீதளாம்பாள், குளிர்ந்த நாயகி.

தலமரம் - பாரிஜாதம், வில்வம். 

பொய்கை - திருக்குளம். 

வரலாறு!   சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் தேரில் திருமுல்லைவாயில் செல்கிறான். வழியில் ஊணான் கொடி படர்ந்து பயணத்தைத் தடுத்தது. கொடியை வாளால் வெட்ட, வாளில் குருதிக்கறை படிந்தது. அதிர்ந்த மன்னன் கொடியை அகழ்ந்து பார்க்க, குருதி வடிந்த நிலையில் சிவலிங்கம் இருந்தது. சிறந்த சிவபக்தனான மன்னன், தன் செயலுக்கு மிகவும் மனம்வருந்தித் தன்கையை வாளால் துண்டித்தான். சிவன், பார்வதியோடு தோன்றி அவன் கையை வளரச்செய்து அருளினார். நெகிழ்ந்த மன்னன் இறைவனைக் கைதந்த பிரான், ஒத்து ஆண்ட ஈஸ்வரன், மனோ அணுகுலேஸ்வரர் என்று புகழ்ந்து போற்றி, ஆலயம் எழுப்பி லிங்கத்தை நிறுவினான். 

தலத்தின் சிறப்புகள்!

மன்னன் வாளால் எற்படுத்திய வடுவினை லிங்கத்தில் காணலாம்!

பொதுவாக சிவன்கோவில்களில் நவக்கிரகங்கள் வடகிழக்குப் பகுதியில் இருக்கும். இங்கு தென்கிழக்குப் பகுதியில் இருக்கிறது. 

பங்குனியில் பெருவிழா, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம் சிறப்பானவை. 

சிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை!
)
மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் திருக்கோயில். எலுமிச்சை விளக்கும் மாலையும் அங்கே அவ்வளவு பிரசித்தம். அதை விட அந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பாக அமைந்திருப்பது அந்தக் கோயிலின் சிற்ப வேலைபாடுகள்.
கற்தூண்களில் காணப்படும் வேலைபாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. அதற்கு மேலே அங்கே கருங்கல்லினால் செய்யப்பட்ட சிங்கத்தின் சிலை அங்கு வரும் பக்தர்கள் பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு எலுமிச்சை என்று சொல்லப்படும் பந்து போன்ற அமைப்பு வாயின் உள்ளே சுற்றிக் கொண்டே இருக்கிறது.இத்தனை அதிசயம் நிறைந்த அந்த கோயிலை தரிசிக்க இப்போதே ஆவலாய் இருக்கிறதல்லவா..!


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள "கோட்டைமேடு பத்ரகாளி" திருக்கோயில். இந்த பத்ரகாளிக்கு எலுமிச்சை என்றால் அவ்வளவு பிரியம். எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடுவாள்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், கடையேழு வள்ளல்களின் ஆட்சி பகுதியான இங்கு 18 பட்டி முழுவதும் எங்கு பார்த்தாலும் கோட்டைகளாக இருந்துள்ளது. மேலும் பரந்து விரிந்த நிலையில் ஒரு பெரிய ஏரி இந்த பகுதியில் இருந்துள்ளது. ஆனால் சரியான மழை இல்லாமல் ஏரியானது வறண்டு, விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர்.

“ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வடது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி”. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.


‘மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார்’. இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். “இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்”.

இதனால் பத்ரகாளியின் கோபத்தை தணிக்க கோவில் முழுக்க கருங்கற்கள் மற்றும் பளிங்குகற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயம் எப்போதும் குளுமையாக இருக்கிறது. “எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள்”.

காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. “சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது”. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குவதாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பத்ரகாளிக்கு எலுமிச்சை பழத்தில்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும். மேலும் திருமண தடை நீங்கும், தொழில் வளம் பெருகும் மற்றும் நோய் நொடிகள் உடனடியாக தீரும். இந்த கோவிலில் பூ போட்டு வாக்கு கேற்கும் நிகழ்ச்சியானது மிகவும் விஷேசமாகும். பத்ரகாளி சரியான வாக்கை அருள்வாள் என்பது மக்களின் உண்மையான நம்பிக்கை.

Saturday, November 22, 2014

நவாவரண பூஜையில் ஸ்ரீசக்ர நாயகி!


                                                நவாவரண பூஜையில் ஸ்ரீசக்ர நாயகி!
ஒரு குழந்தையின் பலமே அதன் தாய்தான். அந்தத் தாயே குருவாகவும் விளங்கினால், அதைவிட பெரும் பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும்? கருணையே வடிவாய் உலகைக் காத்து ரட்சிக்கும் ஜெகன்நாயகி ஸ்ரீராஜராஜேஸ்வரி லோக குருவாக திகழ்கிறாள். இந்த சர்வேஸ்வரி மஹாமேருவில் நடுநாயகமாய் கொலு வீற்றிருக்கிறாள். இந்த மஹாமேருவின் அமைப்பையே யந்திரங்களில் ஸ்ரீசக்கரமாய் உருவகப்படுத்துகிறார்கள்.


ும்மூர்த்திகள், மூன்று குணங்கள், முக்காலங்கள், மூன்று அவஸ்தைகள் என மும் மூன்றாகக் குறிக்கப்படுவது அனைத்தும் சக்தியின் ஸ்வரூபம். இதன் காரணத்தினாலேயே சக்தியானவள் திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். திரிபுர சுந்தரி என்றால் மூவுலகதிலும் அழகானவள் என்று பொருள். சக்தி வழிபாட்டில் மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற மூன்றையும் முக்கோணத்தின் மூன்று மூலைகளாகக் குறிப்பிடுவர். சக்தி வழிபாட்டில் வாயினால் செய்யப்படும் மந்திர உச்சாடனத்தின் வலிமையை, கருத்தை வரைபடமாக உருவகப்படுத்துவதே யந்திரம் ஆகும். மற்ற அனைத்து சக்கரங்களுக்கும் மூலமாக ராஜ சக்கரமாக விளங்குவதனால் இதனை "ஸ்ரீசக்கர ராஜ' என்றே குறிப்பிடுவர். இது ஒன்பது படி நிலைகளாக அமைந்திருக்கும். இதனை பூஜிப்பது நவ ஆவரண பூஜை என்று அழைப்பர். ஒன்பது ஆவரணங்கள் கொண்ட அமைப்பாக இருப்பதால் இந்தப் பெயர்.

முதல் ஆவரணம்: மூன்று கோடுகளுடனும் கோயில்கதவு போன்ற நான்கு வாசல்களுடன் கூடிய வெளிப்புற சதுர வடிவம் "த்ரைலோக்ய மோஹன சக்கரம்' எனப்படுகிறது. இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை ஆராதிப்பவர்களுக்கு எந்த சக்தியாலும் இடையூறு ஏற்படாது. நினைவாற்றல் பெருகும்.

இரண்டாவது ஆவரணம்: இந்த ஆவரணத்தில் பதினாறு தாமரை இதழ்கள் இடம் பெற்றுள்ளன. இக்கமல ரூபத்தில் அருளாட்சி செய்யும் காமாகர்ஷிணி முதல் சரீராகர்ஷிணி வரையிலான பதினாறு யோகினிகள் பூஜை செய்பவரின் மன அழுக்கை நீக்குகின்றனர்.

மூன்றாவது ஆவரணம்: எட்டு தாமரை இதழ் கொண்ட இந்த ஆவரணத்தில் வாசம் செய்யும் தேவதைகள் பூஜிப்பவருக்கு தியானம், பூஜை இவற்றில் பரிபூரண ஈடுபாட்டை அளிக்கிறார்கள்.

நான்காவது ஆவரணம்: இந்த ஆவரணத்தில் தேவியானவள் சந்திரனின் வடிவிலே ஜொலிக்கிறாள். 14 கோணங்கள் கொண்ட நான்காவது ஆவரணத்தில் பதினான்கு யோகினிகள் வாசம் செய்கின்றனர். இந்த பூஜையின் பலனாக புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஐந்தாவது ஆவரணம்: பத்து கோணங்களைத் தன்னகத்தே கொண்ட இந்த ஆவரணத்தில் சர்வசிதிப்ரதா முதல் சர்வ செüபாக்யதாயிணி வரை பத்து யோகினிகள் அடங்குவர். இங்கு சனீஸ்வரர் ஆட்சி செய்வதாக ஐதீகம். இந்த ஆவரண பூஜை, தேகம், மனம் மற்றும் ஆத்ம பலங்களைத் தருகிறது.

ஆறாவது ஆவரணம்: தேவி இங்கே சூரிய ஸ்வரூபமாய் பிரகாசிக்கிறாள். இதுவும் பத்து கோணங்களைக் கொண்டது. இந்த ஆறாவது ஆவரண பூஜையினால் காம, குரோத, மத மாச்சரியம் நீங்கும். பொறாமை குணம் விலகும்.

ஏழாவது ஆவரணம்: எட்டு முக்கோணங்கள் பெரிய அளவில் இடம் பெற்றுள்ள இச்சக்கரத்தில் எட்டு தேவதைகள் பிரசன்னமாயிருக்கிறார்கள். புதன் இங்கு வீற்றிருக்கிறார். இந்த பூஜையால் ஆன்ம ஞானம், புத்தி சாதுர்யம், நாவண்மை உண்டாகும்.

எட்டாவது ஆவரணம்: இந்த பூஜையில் அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் வழிபடப்படுகின்றன. இங்கு தேவி மஹாதிரிபுரசுந்தரியாய் வீற்றிருக்கிறாள். தேவியின் கரும்பு வில் பாணம் மன்மதனின் காம சக்தியை அழிக்க, அங்குசம் நம் மனதின் தீய எண்ணங்களை அழிக்கிறது. பாசமானது அன்னையிடம் மனதை நிலைக்கச் செய்கிறது.

ஒன்பதாவது ஆவரணம்: அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரப்ரும்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதி நிலை இதுவே ஆகும். இந்த கோணத்தில் அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இதுவே ஸ்ரீசக்ர நவாவரண அமைப்பாகும்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கு மஹாமேரு அமைப்பிலேயே ஓர் ஆலயம் வேலூர் மாவட்டம், சோளிங்கரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வீரமங்கலத்தில் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், 11 அடுக்குகளாக, பிரம்மாண்ட முறையில் அமையவுள்ளது இந்த ஆலயம். இதன் சிறப்பு அம்சமாக ஸ்ரீசக்ர கோணத்தின் 117 அதிதேவதைகளையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள். மஹாமேரு கோயிலுடன் தியான மண்டபம், வேதபாடசாலை ஆகியவையும் அமையவுள்ளது.

தகவலுக்கு: 044 - 43564156.


வாரணம் ஆயரம் ஆயினும்  நவாவரண நாயகி அறிவோம்
சுயம்பு சுவாமிகள்

'விடங்கர் ' என்பது தானே தோன்றி வந்த சுயம்பு மூர்த்திகளை
குறிக்கும் சொல்லாகும் அவ்வாறு இறைவன் தானே வெளிப்பட்டுக்
காட்சி கொடுத்த தளங்களாக  7 தளங்கள் உள்ளன. அவையனைத்தும்
நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ளன அவை
பற்றிய விவரங்களை காண்போம்.

1. வீதி விடங்கன் - திருவாரூர்

2. நகர விடங்கர் - திருநள்ளாறு

3. சுந்தர விடங்கள் - நாகப்பட்டினம்

4. ஆதி விடங்கர் - திருக்கார வாசல்

5. நீல விடங்கர் - திருவாய்மூர்

6. அவனி விடங்கர் -  திருக்குவளை

7. புவனி விடங்கர் - திருமறைக்காடு

இந்த 7 திருத்தலங்களில் தலைமையிடமாக  திருவாரூர் உள்ளது


சுயம்புவாய் இறைவன் மட்டுமே அவதரிக்க முடியும்

சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பாசபரிமலை விரத முறைகள்! 


கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :


1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.

7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.

11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.

14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.

16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.

18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.

19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

சுவாமியே சரணம் ஐயப்பா ! சுவாமியே சரணம் ஐயப்பா !!
நாகம் அங்குசத்துடன் விநாயகர்பொதுவாக விநாயகரின் இடது கையில் அங்குசமும், வலது கையில் பாசக் கயிறும் இருக்கும். ஆனால் சங்கரன் கோயிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயிலில் வீற்றிருக்கும் சர்ப்ப விநாயகர், வலது கையில் அங்குசமும், இடது கையில் சர்ப்பமும் கொண்டு அருள் பாலிக்கிறார்.

இந்த விநாயகரை வழிபட்டால் சர்ப்பதோஷம் நீங்கும். இவ்வாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலசர்ப்பதோஷம் நீங்க பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கே சங்கன், பதுமன் என்ற நாகர்களின் தவத்துக்கு இரங்கிய சங்கர நாராயணர் அவர்களுக்கு காட்சியளித்தார். எனவே கோயிலில் உள்ள தெப்ப குளத்திற்கு நாகசுனை என்று பெயர். அதில் நீராடி சர்ப்ப விநாயகரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் உண்டாகும்.
மரகத விநாயகர்நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது கோட்டாறு. இங்கே தேசிக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. மூலவரை மரகத விநாயகர் என்று அழைக்கின்றனர்.

17ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். கருவறையின் மேற்கூரை மரத்தால் ஆனது. கருவறை பீடத்தில் விநாயகர் உள்ளார். கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கி உள்ள அறையில் சிவனும், பிரியாவிடை நாயகியும் உள்ளனர். விடலைப் பிள்ளையார், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, பூதத்தான், கன்னி விநாயகர், நடராஜர், சிவகாமி அம்பாள், பத்மநாப சுவாமி, நாகராஜா, மயிலேறும் பெருமாள், விசாலாட்சி ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்புரிகிறார்கள்.

ஆலமரத்தடியில் சுந்தர விநாயகர்
ஆலமரத்தடியில் சுந்தர விநாயகர்
சுமார் நூறாண்டுகளாக ஆலமரத்தடியில் அருளும் சுந்தரவிநாயகரை பிரதமர் நேரு, மதுரை வந்தபோது வழிபட்டுச் சென்றார். அன்றிலிருந்து இவரை ஆலாலய நேரு சுந்தரவிநாயகர் என்றே அழைக்கின்றனர். பாசம், அங்குசம், அபயம், வரதத்துடன் இவருக்கு 4 கரங்கள். மூலவரான விநாயகருக்கு மாதந்தோறும் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் 21 கனி மற்றும் பலகார வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.

சுந்தரவிநாயருக்கு மஞ்சளை மாலையாகக் கட்டி தொடர்ந்து ஐந்து வாரங்கள் அணிவித்தால் தடை நீங்கி திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் கோயில் கொண்டு இவர் அருள் புரிகிறார்.


ஆலமரத்தடி நாயகனை வணகினால் ஆலாய் தழைத்திடும் வம்சம் 

சென்னை அருகே உள்ள நவக்கிரக கோவில்கள் 
1) கொளப்பாக்கம்  - அகஸ்தீஸ்வரர் ஆனந்த வள்ளி  -  சூரியன் 

2) சோழ மங்களம்  - சோமனாதீஸ்வரர் காமாட்சி -       சந்திரன் 

3) பூந்தமல்லி  -       வைத்தீஸ்வரர் தையல் நாயகி -     அங்காரகன் 

4) கோவூர்  -             சுந்தரேஸ்வரர் சௌந்தாம்பிகை -   புதன் 

5) போரூர் -               ராமநாதீஸ்வரன்  -                             குரு 

6) மாங்காடு -           வெள்ளீஸ்வரர்  -                                சுக்கிரன் 

7) பொழிச்சலூர் -     அகஸ்தீஸ்வரர் ஆனந்த வள்ளி -   சனி 

8) குன்றத்தூர்  -        நாகேஸ்வரர் காமாட்சி  -                 ராகு 

8) கெருகம்பாக்கம் - நீலகண்டேஸ்வரர் ஆதிகாமாட்சி  - கேது 


நம்மை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களை நாமும் சென்று சுற்றி வருவோமா 
விகட சக்கர விநாயகர் 
தட்சயாகத்தின் பொது வீரபத்திரர் மீது திருமால் சக்கரத்தை 
ஏவினார். வீரபத்திரர்  அணிந்திருந்த  கபால மாலையில் 
இருந்த கபாலம் அதை விழுங்கி விட்டது, சக்ராயுதத்தை 
மீட்டு வரும்படி, விஷ்வக்சேனரை திருமால் அனுப்பி 
வைத்தார்.

முனிவர் ஒருவரின் அறிவுரைப்படி விஷ்வக்சேனர், பூலோகத்தில் 
காஞ்சியில் சிவனை வழிபட்டு வீரபத்திரரின் காட்சி பெற்றார். 
ஆனால் அவர் சக்ராயுதத்தை கபாலத்திடமே கேட்டுப் பெறும்படி 
கூறினார். 

இந்நிலையில் விஷ்வக்சேனர்  தன் கை, கால்களை கோணலாக்கி 
தள்ளாடி நடந்தார், அதைக்கண்டு அனைவரும் சிரிக்க, கபாலமும் 
சிரித்தது. அப்போது வாயிலிருந்து சக்ராயுதம் நழுவி விழுந்தது.

விஷ்வக்சேனர் அதை எடுக்கும் முன் விநாயகர் எடுத்துக் கொண்டு 
தனக்காகவும் ஒருமுறை விகடக் கூத்தாடினால் சக்ராயுதத்தை 
தருவதாக கூற , அதன் படி கூத்தாடி , சக்ராயுதத்தை பெற்றார் 
விஷ்வக்சேனர்.

இவ்வாறு சக்ராயுதத்தை வழங்கிய விநாயகர் விகட சக்ர விநாயகர் 
என்ற பெயருடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அருள் 
பாலிக்கிறார். 


விகடம் ரசித்த விநாயகரை , நாமும் தரிசிப்போம் 
லிங்க வடிவ பிள்ளையார் - தீவனூர்

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி விநாயகர்
கோயில். ஆடு மேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது
யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது அது விநாயகரின்
உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை
செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில்
இருக்கிறார் பால் அபிஷேகம் செய்யும் பொது லிங்கத்தில்
படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம்.


இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப் படுகிறார்
விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஓன்று இணைந்தபடி,
மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை
'பிரம்மா', 'விஷ்ணு', 'சிவன்', என கூறுகின்றனர்.


திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள்
இந்த மரங்களை சுற்றி வருகின்றனர், இவற்றிக்கு தினமும்
பூஜை செய்யபடுகிறது


திறந்திருக்கும் நேரம் காலை 6 முதல் மாலை 7 வரை


இருப்பிடம். திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் 13 கி.மீ தொலைவில் தீவனூர்


தகவல் தொடர்பிற்கு : 94427 0813


"நெற்குத்தி கல்லாயிருந்து , நெஞ்சில் நிலைத்த விநாயகர்"

தேனை உறிஞ்சும் அதிசய விநாயகர்பிரளயம் வெள்ளப்பெருக்கால் ஏற்ப்படும் அழிவு. ஒருமுறை ஏற்ப்பட்ட பிரளயத்தில் இருந்து மக்களை காத்து பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இந்த பகுதிக்கு திருபுறம்பியம் என்ற பெயர் வந்ததாக கூறபடுகிறது இதற்க்கு புராணக் கதை ஓன்று உள்ளது.

சாட்சிநாதர் கோவில்

கும்பகோணத்திற்கு வடமேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருபுறம்பியம் பகுதியில் கோவில்கொண்டுள்ள சிவன் 'சாட்சிநாதர்' என்ற நாமத்தால் அழைக்கபடுகிறார். உமையவளின் திருநாமம் கரும்பன்ன  சொல்லம்மை என்பதாகும் புன்னை மரம் தல விருட்சமாக கொண்ட இந்த தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.

ரத்தினவல்லி என்ற வணிககுல பெண், தனது மாமன் மகனுடன் இந்த ஊருக்கு வந்தாள். அப்போது பாம்பு ஓன்று தீண்டியதில் அந்த பெண்ணின் மாமன்  மகன் இறந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த திருஞானசம்பந்தரிடம் தன்  வேதனையைக் கூறினாள்  ரத்தினவல்லி. இதையடுத்து சிவனை வேண்டி  பதிகம் பாடி, இறந்தவனை உயிர்பித்து அறிளினார் திருஞானசம்பந்தர்.

பின்னர் திருப்புறம்பியம் கோவில் மடப்பள்ளி அருகே உள்ள வன்னி மரத்தடியில் கிணற்றின் அருகில் சிவபெருமானின் முன்பு திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் ரத்தினவல்லி கணவனின், முதல் மனைவி , திருமணம் நடந்தது உண்மையல்ல என்று மறுத்ததுடன், ரத்தினவல்லி பற்றி ஊராரிடம் அவதூறு பரப்பினாள். இதனால் மனமுடைந்த ரத்தினவல்லி  திருபுறம்பியம் சிவனிடம் வேண்டினாள். அவள் துயர்போக்கும் வகையில் சிவபெருமான் சாட்சியாக வந்து ஊராருக்கு உண்மை உரைத்தார் அதனால் அவர் சாட்சிநாதர் ஆனார்.

பிரளயம் காத்த விநாயகர்

இந்த தலம் சிவ தலமாக விளங்கினாலும் , இங்கு கொலுவிருக்கும் விநாயகர் பிரசித்து பெற்றவர். கிருதாயுகத்தின் முடிவில் பிரளயம் ஓன்று உருவானது, அதில் இருந்து அந்த பகுதி மக்களை காத்தருள சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார் அத்துடன் பிரளயத்தில் இருந்து மக்களை காத்தருளும் பொறுப்பை விநாயகப் பெருமானை அழைத்து வழங்கினார்

ஓங்காரத்தை பிரயோகம் செய்த விநாயகர் சப்த சாகரத்தின் (எழுகடல்) பெருக்கையும், ஒரு கிணற்றில் அடக்கினார்  அப்போது வருணபகவான் தன்  திருமேனியில் இருந்து சங்கு, நாத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் விநாயகரை பிரதிஷை செய்து அவருக்கு 'பிரளயம் காத்த விநாயகர்' என்று பெயரிட்டு போற்றி வழிபட்டார்.

தேனை உறிஞ்சும் அதிசயம்

சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் மேனியில் நிறைய கிளிஞ்சல்களை இந்த தலத்திற்கு வந்தால் காணலாம். இந்த கோவிலின் அருகிலேயே ஏழு கடல் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்தன நிற விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி தினந்தன்று இரவு மட்டும் தேன் அபிஷேகம் நடைபெறும். மற்றபடி  எந்த நாளும் இவருக்கு அபிஷேகம்  நடைபெறாது.

சதுர்த்தி அன்று இரவு முழுவதும் விநாயகருக்கு தேன்  அபிஷேகம் செய்யப்படும். அப்போது ஆபிஷேகம் செய்யப்படும்  தேன் முழுமையாக விநாயகரின் திருமேனியால்  உறிஞ்சப்பட்டு விடும். இந்த காட்சியை காண, விநாயகர் சதுர்த்தி தினத்தில் இத்தலத்திற்கு  வருபவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. தேன் அபிஷேகத்தின்  போது சந்தன நிறத்தில் இருந்து விநாயகர் செம்பவள மேனியில் பளபளப்பார். இந்த அபிஷேக நேரத்தின் பொது பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து காரியங்களும், அடுத்த ஆண்டு அபிஷேகத்திற்க்குள்  நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கை.

நாமும் வழி படுவோம் தேனுறிஞ்சி விநாயகரை
வாழ்வில் வளம் பெறுவோம் 
பிள்ளையார் பிடிப்பதன் பலன்


1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும்

2. குங்குமத்தில் பிடித்தால் செவ்வாய் தோஷம் விலகும்

3. புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம்           செழிக்கும்  பிணிகள் அகலும்

4. வெல்லத்தில் செய்து வணங்கினால், உடலின் உள்ளேயும் வெளியேயும்
ஏற்படும் கட்டிகள் (கொப்பளம்) கரையும்

5. உப்பினால் செய்து வணங்கினால் எதிரிகள் காணாமல் போய்விடுவர்

6. வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால் , பில்லி சூனியம் விலகும்

7. வீபுதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் நோக்கல் தீரும்

8. சந்தனத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திரப் பேரறு கிடைக்கும்

9. சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் தீரும்

10. சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி
வீட்டில் சுபகாரியம் நடைபெறும்

11. வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

12. வெண்ணையில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் கடன் தொல்லை தீரும்பிள்ளையார் வண்ணங்கள் பலவானாலும் எண்ணங்கள் ஈடேறும்

தான்தோன்றீஸ்வரர் - எண்ணியது ஈடேறும்!எண்ணியது ஈடேறும்!சென்னை, அம்பத்தூர் (ஓ.டி.) பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரகடம். இங்கே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. ஏழரை அடி உயரமுள்ள தான்தோன்றீஸ்வரர் அருள்புரிகிறார். சுயம்பாகத் தோன்றியவர் இவர். அம்பாளின் திருநாமம் அமிர்தவல்லி. நந்திதேவர், வலம்புரி செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா உடனுறை சுப்ரமணியர், வலம்புரி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், லிங்கோத்பவர், அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை, ஆகியோரும் இக்கோயிலில் எழுந்தருள்கின்றனர்.

ஐம்பொன்னால் ஆன பிரதோஷ நாதர், சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் ஆகியோர் உற்ஸவ மூர்த்திகளாக உள்ளனர்.

விசேஷங்கள்: இங்கே இரண்டு கால பூஜைகள் சிறப்பாக நடக்கின்றன. இதுதவிர திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 திருமுறை போற்றி பதிகங்கள் பாடி வழிபடுகின்றனர். செவ்வாய்க் கிழமை அம்மனுக்கு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது. வியாழக் கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் நடக்கின்றன. வெள்ளிக் கிழமை அமிர்தவல்லி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடை பெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியன்றும் ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

எண்ணியது ஈடேறும்!: நந்தி பகவானை வேண்டி அவருக்கு அணிவித்த மாலையை அணிந்துகொண்டு கோயிலை மூன்று முறை பக்தியுடன் வலம் வந்து வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தானங்களின் பலா பலன்கள்

ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!


மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.

தானங்களும் - அதன் பலன்களும்

1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
ஸ்ரீ ராமர் பாதம்பட்ட புண்ணிய ஸ்தலங்கள்


ஸ்ரீ ராமர் கலடியாகவே அயோத்தி முதல் ராமசேது தாண்டி இலங்கை வரை
யாத்திரை புரிதுள்ளார்  அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்.

1) அயோத்யா:- இது ராம ஜெனம் பூமி, இந்துக்களின் புனித பூமி. துளசி
    தாசர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம்
    அளித்த நாம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம். வாரணாசி
    லக்னோ மார்கத்தில் அயோத்ய ரயில் நிலையம் உள்ளது.  வாரணாசியில்
    இருந்து 189 கிலோமீட்டர், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர்.

2) பக்ஸர்:-  சித்தாசிரமம், வேத சிரா, வேத  கர்ப்பா, க்ருஷ் என்று வேறு
    பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு
    பலா, அதிபலா ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது.
    கிழக்கு ரயில்வேயின் பாட்னா மொகல்சராய்  ரயில் மார்க்கம்.

3) ஜ்னக்பூர்:- மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதமடி -
    ஜனக்பூர்  சாலையிலிருந்து 36 கிலோமீட்டர்,. இங்குள்ள பெரிய
    மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.

4) பரத்வாஜ ஆசிரமம்:- ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து
    ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம்
    பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது.
    ப்ரயாகை  தீர்த்தராஜபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது
    அலகாபாத்.

5) வால்மீகி ஆசிரமம்:- ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய
    வால்மீகி முனிவர் வழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்க்கே 30 கிலோமீட்டர்
    கான்பூரில் பிடூரில் கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் என்று
    இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமம் என்று கூறுகின்றனர்.

6) சித்ரகூடம்:- ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்
     ஜபல்பூர் ரயில் மார்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷனிலிருந்து 36
     கிலோமீட்டர்.

7) அனஸூயா ஆசிரமம்:-  ரிஷி பத்தினி அனஸூயா வசித்த இடம். சித்ர
    கூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

8) ஸூதீக்ஷ்ண ஆசிரமம்:- வீரசிங்கபுரத்திளிருந்து  22 கிலோமீட்டர்,
    சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர், ஜைத்வாரா ரயில்
    நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கப்புரம்.

9) அகஸ்தியாசிரமம்:- குந்தாபூர்  கோகர்ண மார்கத்தில் உள்ள
     கங்கோலியிலிருந்து  பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மழைத் தொடரைக்
     காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான்
     கடல் அருகே அகஸ்தியாசிரமம் உள்ளது.

10)ராம்டேக் :- இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால்
     சிறிய மலை என்று பொருள்.  டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது
     என்று பொருள். ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின்
     போது சிறிது காலம் தங்கி இருந்ததால் இது புண்ய ஸ்தலமாக
     கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் சிவனி மார்கத்தில்
     தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் அருகில் உள்ள இடமே ரம்டேக்.
     நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்.

11)பஞ்சவடி:- ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது
    விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக   
    முக்கியமான இடம். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில்
    த்ராயம்பகேஸ்வரத்திலிருந்து  கோதாவரி தோன்றுகிறது . சென்ட்ரல்
    ரயில்வேயின் மும்பை புசாவல் தடத்தில் நாசிக் ரோட்டிலிருந்து
    8 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.

12)சபரி ஆசிரம:- சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை
     ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜய நகர
     சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புறாதான் நகரம் ஹம்பி ஆகும்.
     இது 36 கிலோமேடேர் விஸ்தீர்ணத்தில்  பரவிய பெரிய நகரம். நகர
     மத்தியில் விருபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி
     கோலாகலத்துடன் துள்ளி வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர்.
     இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீராமர் ஆலயம் இருக்கிறது.
     இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான்
     மதங்க முனிவர் வசித்து வந்தார். இவர் ஆசிரமத்திற்கு அருகேதான்
     சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

13)கிஷ்கிந்தா:- கர்நாடகம் ஹூப்ளி கதக் பெல்லாரி மார்க்கத்தில்
     ஹான்ஸ்பேட், பெல்லாரியில்ருந்து 65 கிலோமீட்டர், ஹூப்ளியிலிருந்து
     145 கிலோமீட்டர் தூரம், கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரம்.
     இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி, ஹாஸ்பேட் விஜய
     நகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி. இதை ஒட்டிய பகுதியே
     கிஷ்கிந்தா, இதை ஆண்டவர் ஸூக்ரீவ மஹாராஜா.

14)ருஸ்யமுகம்:- கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில்
      அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்க்கு 3 கிலோமீட்டர் தூரத்தில்
      பம்பா சரோவர் ள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம்
      ஆகும்.

15)ராமேஸ்வரம்:- ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும்
     செனையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி
     18 கிலோமீட்டர் தூரம்.

16)ராமஸேது:- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா
     ஜெமினி 11 என்ற விண்கலத்தை  விண்ணில் ஏவியது.  இந்த விண்கலம்
     1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம்  தேதி ராமேஸ்வரம் ஸ்ரீலங்கா
     இடையே அமைந்துள்ள பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது
     ஒப்பற்ற தனித்தன்மையுடய வளைவுடன் கூடிய மனிதனால்
     அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பலம்தான் ராமசேது     (நாஸா எடுத்த இந்தப் படத்தை 1993ம்  ஆண்டு டில்லி பிரகாத்தி 
     மைதானத்தில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில்
     பிரதானமாக வைத்திருந்தது குறிப்பிடத் தகுந்தது ) இதன் மீது நடந்தே
     ராமர் தன்  சைனியத்துடன் இலங்கை சென்றர்.

17)இலங்கை:- குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு.
     அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான்.
     பத்துத் தலைகளுடன் கூடிய அவனை வீழ்த்தி சீதா தேவியை
     அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து
     அயோத்திக்கு திரும்பினார்.

ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும்
ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபிய, பல்கேரியா நாடுகளிலும்
பரவி உள்ளது.  பர்மிய,கம்போடிய, சீன செக், எகிப்திய, ரஷ்ய, ஆங்கில
மொழிகள் போன்ற ஏராளமான மொழ்களிலும் ராமாயணம் மொழி
பெயர்க்கப் பட்டுள்ளது.

ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ, மாற்றவோ
மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா
முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவி உள்ளன. இவற்றில்
முக்கியமான சிலவற்றயே மேலே பார்த்தோம்.

மர்யாதா புருஷோதமான ராமன் தன்  ஜீவியத்தால் வாழ்க்கை முறையை
காண்பித்தார். இது கர்மயோகம்

தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறார் இது பக்தியோகம்

தனது அகண்டாகாரப் பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறார்.
இது ஞானயோகம்.

'ராம' மந்திரம் சொன்னால் பட்டமரமும் தளிர்க்கும். இந்த மந்திரத்தை
சொல்லத் தெரியாமல் 'மரா' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான்
ராமாயணத்தின் ஆசிரியரானார். காசியில் இறப்பவர்களின் காதில்
சிவபெருமான், ராம' மந்திரத்தைச் சொல்லி அவர்களுக்கு பிறப்பற்ற
நிலையை அருளுகிறார்.

நாமும் இன்  நன்னாளில் இருந்து தினமும் 'ராம, ராம, ராம' என்ற தாரக
மந்திரத்தைச் சொல்லிப்பழகுவோம். இம்மந்திரத்தைச் சொல்வோரை
கண்மணி போல் பாதுகாப்பார் எம்பிரான் ஸ்ரீராமர்.