Tuesday, March 29, 2016

யௌவனேஸ்வரர் ஆலயம் - சிதம்பரம்.




சிதம்பரம் நடராஜர் கோவில் மேலவீதியில் உள்ளது யௌவனேஸ்வரர் ஆலயம். (இளமையாக்கினார் கோவில்.)

இறைவன் - யௌவனேஸ்வரர், திருப்புலீஸ்வரர்.

இறைவி - திரிபுரசுந்தரி.

தல விருட்சம் - தில்லை மரம். 

தீர்த்தம் - இளமை தீர்த்தம்.

புராணப் பெயர் - திருப்புலீஸ்வரம்.

வரலாறு! திருநீலகண்டர் என்ற சிவனடியாருக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிணக்கை நீக்கி, அவர்களுக்கு இளமையை அருளியதால் ஈசனுக்கு இளமையாக்கினார் என்ற திருப்பெயர். வடமொழியில் யௌவனேஸ்வரர். (யௌவனம் - இளமை.)

தலத்தின் சிறப்புகள்! 

தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் சிறப்பானது!


பிரச்சனையால் பிரிந்துள்ள தம்பதியர், தங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லாதோரும், ஒற்றுமையாக இருக்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.


சிறிய, சிறப்பான ஆலயம்!  

No comments:

Post a Comment