Saturday, October 11, 2014

லலிதா சகஸ்ர நாமம்



1. தியானம்

1. மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸா மஞ்சுலவாக்விலாஸாம்
மாஹேந்த்ரநீலத்யுதி கோமலாங்கீம் மாதங்ககன்யாம் ஸததம் ஸ்மராமி

பொருள் : மாணிக்க வீணையை வாசித்துக்கொண்டிருப்பவளும், இளமை நிரம்பியவளும், இனிய சொல்லாற்றல் வாய்ந்தவளும், இந்திர நீலமணி போல் பிரகாசிக்கும் அழகிய மேனியை உடையவளுமான மதங்க முனிவரின் மகளான சியாமளா தேவியை எப்போதும் தியானிக்கிறேன்.

2. சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோந்நதே குங்குமராகசோனே
புண்ட்ரேக்ஷú பாசாங்குச புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

பொருள் : உலகின் அன்னையே! தலைமுடியில் பிறை சந்திரனை அணிந்தவளே! குங்குமம் போன்ற செந்நிற மேனியுடன், நான்கு கைகளில் செங்கரும்பு, பாசம், அங்குசம், புஷ்பபாணம் ஆகியவற்றை வைத்திருப்பவளே ! உன்னை வணங்குகிறேன்.

2. பிரார்த்தனை

1. மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினிகடாக்ஷயது
கல்யாணீ கதம்பவனவாசினி

பொருள் : மரகதப் பச்சைநிற மேனியை உடையவளும், பெருமிதத்தோடு விளங்குபவளும், கதம்பவனத்தில் வசிப்பவளும், மங்களகரமானவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான அன்னை சியாமளாதேவி நமக்கு அருள் புரியட்டும்.

2. ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுதே ஜய
ஸங்கீதரஸிகே ஜய லீலாசுகப்ரியே

பொருள் : மதங்க குமாரியே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! நீலத்தாமரை போல் பிரகாசிப்பவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! சங்கீதத்தில் விருப்பமானவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! கிளியோடு விளையாடி மகிழ்பவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

3. தண்டகம் (சியாமளாதேவியின் முக வர்ணனை)

1. ஜய ஜனனி ஸுதாஸமுத்ராந்த ஹ்ருத்யன் மணித்வீபஸம்ரூட பில்வாடவீமத்ய
கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தார வாஸப்ரியே, க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே.

பொருள் : அன்னையே! பரமசிவனுக்குப் பிரியமானவளே! எல்லா உயிர்கள் மீதும் அன்புடையவளே! உனக்கு வெற்றி உண்டாகட்டும். அமுதக்கடலின் நடுவிலுள்ள மணித்வீபம் என்ற தீவில், வில்வ வனத்தின் மத்தியில் கற்பக மரங்களைக் கொண்ட கதம்பவனத்தில் வசிப்பதற்கு விருப்பமுடையவளே!

2. ஸாதராரப்த ஸங்கீதஸம்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகா பத்த சூலீஸநாதத்ரிகே, ஸானுமத் புத்ரிகே

பொருள் : இமவானின் மகளே! நீ ஆர்வத்துடன் சங்கீதத்தைக் கேட்டு ரசிக்கும்போது உன் கூந்தல் அசைகிறது. அப்போது நீ உன் கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப மலர்மாலையும் அசைந்து உன் முதுகை அலங்கரிக்கிறது.

3. சேகரீபூத சீதாம் சுரேகா மயூகாடலீபத்த ஸுஸ்நித்த
நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோகஸம்பாவிதே

பொருள் : எல்லா உலகங்களாலும் போற்றப்படுபவளே! உன் தலைமுடியில் இருக்கும் சந்திரகிரணங்களின் ஒளியோடு சேர்ந்து முன்நெற்றியில் விழும் கருகருவென்று பிரகாசிக்கும் மயிர்க் கூட்டங்கள் உனது நெற்றியை அலங்கரிக்கின்றன.

4. காமலீலா தனுஸ்ஸன்னிப் ப்ரூலதாபுஷ்ப
ஸந்தோஹஸந்தேஹ க்ருல்லோசனே, வாக்ஸுதாஸேசனே.

பொருள் : அமுதம் பொழிவதைப் போன்று பேசுபவளே! உனது கண்கள் வில்லைப் போன்று வளைந்த புருவமாகிய கொடியில் பூத்த அழகு மலர்களோ என்று சந்தேகப்படும் வகையில் அழகாக இருக்கின்றன.

5. சாருகோரோ சனாபங்ககேலீலலாமாபிராமே, ஸுராமே, ரமே.

பொருள் : மனதைக் கவரும் தெய்வீக அழகுடையவளே! நறுமணம் கமழும் கோரோசனை திலகம் அணிந்து நீ உள்ளத்தை மகிழ்சியில் திளைக்கச் செய்கிறாய்.

6. ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகச்ரேணிகாசந்த்ரிகா மண்டலோத்பாஸி
லாவண்ய கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா
ஸமுத்பூதஸெளரப்யஸம்ப்ராந்த ப்ருங்காங்கநா
கீத ஸாந்த்ரீபவன்மந்த்ர தந்த்ரீஸ்வரே, ஸுஸ்வரே, பாஸ்வரே.

பொருள் : மகாலக்ஷ்மியே! இனிமையான குரல் உடையவளே! உன் கன்னங்களில் கஸ்தூரியால் வரையப்பட்ட சித்திர ரேகையின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அந்த ரீங்கார ஒலி. இனிய குரலில் நீ பாடும் வீணையின் ஸ்வரம் போன்ற உனது பாடலை சோபிக்கச் செய்கிறது. சந்திரன் போன்ற அழகுடையவளே! உனது காதணியில் பதித்திருக்கும் முத்து வரிசைகளின் ஒளி உனது கன்னத்தை ஒளி வீசச்செய்கிறது.

7. வல்லகீவாதனப்ரக்ரியா லோலதாலீதலபத்ததாடங்கபூஷா விசேஷான்
விதே, ஸித்தஸம்மாநிதே, திவ்யஹாலாமதோத்வேல் ஹேலாலஸச்க்ஷú
ராந்தோலன ஸ்ரீஸமாக்ஷிப்த கர்ணைகநீலோத்பலே, ச்யாமலே,
பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே, நிர்மலே, ஸ்ரீபலே.

பொருள் : சியாமளாதேவியே! எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! களங்கமற்றவளே! எல்லா செல்வங்களையும் வாரி வழங்குபவளே! சித்தர்களால் போற்றப்படுபவளே! நீ வீணையை மீட்டும்போது உன் தலையை அசைப்பதால், உன் காதில் நீ அணிந்திருக்கும் பனை ஓலையால் செய்யப்பட்ட, விசேஷ காதணியும் அசைவது அழகாகத் தோன்றுகிறது. உன் கண்கள் அசையும் அழகு உன் காதிற்கு மேல் நீ அணிந்திருக்கும் நீலோத்பல மலரின் அழகையும் குறைவுபடச் செய்கிறது.

8. ஸ்வேதபிந்தூல்லஸத்பால லாவண்ய நீ:ஷ்யந்தஸந்தோஹ ஸந்தேஹ
க்ருன்வாஸிகா மௌக்திகே, ஸர்வ மந்த்ராத்மிகே, காலிகே.

பொருள் : காளியே! எல்லா மந்திரங்களின் வடிவமாகவும், இருப்பவளே! நீ அணிந்திருக்கும் மூக்குத்தி உன்னுடைய அழகை மேலும் பிரகாசிக்கச் செய்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால்; உன் நெற்றியில் வியர்வைத் துளிகள் ஒன்றுசேர்ந்து- நெற்றியின் அழகே ஒழுகி ஒன்றாக - மூக்குத்தி போல் அமைத்து பிரகாசிக்கிறதோ என்று சந்தேகப் படும் வகையில் இருக்கிறது.

அன்னபூர்ணா ஸ்தவம்

விச்வஸார தந்திரம் என்பது தந்திர சாஸ்திர நூல்களில் ஒன்று. அதில் அன்னபூர்ணா கல்பம் பகுதியில் உள்ள அபூர்வமான ஸ்தோத்திரம் இது.

1. நம: கல்யாணதே தேவி நம: சங்கரவல்லபே
நமோ பக்திப்ரதே தேவி அந்தபூர்ணே நமோஸ்துதே

பொருள் : மங்களத்தைக் கொடுப்பவளும், மங்களத்தைச் செய்கிற பரமசிவனுடைய நாயகியும், அன்பர்களுக்குப் பக்தியை வழங்குபவளும், எங்கும் எந்தப் பொருளிலும் ஒளியுடன் ஒளிர்பவளுமாகிய அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.

2. நமோ மாயாக்ருஹீதாங்கி நம: சோகவிநாசினி
மஹேச்வரி நமஸ் துப்யமந்நபூர்ணே நமோஸ்து தே

பொருள் : மாயையின் வடிவமாக உள்ள திருமேனியை யுடையவளே! பக்தர்களின் துன்பத்தைக் களைபவளே! மகேசனின் மனைவியாக இருப்பவளே, அன்னபூரணியே, உனக்கு நமஸ்காரம்.

3. மஹாமாயே சிவதர்மபத்நிரூபே நமோஸ்து தே
வாஞ்சாதாத்ரி ஸுரேசாநி சாந்தபூர்ணே நமோஸ்து தே

மகாமாயையின் வடிவமாக அமைந்தவளும், பரமசிவனுடைய தர்மத்துக்குத் துணைவியாக இருப்பவளும், அன்ரவர்கள் விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், தேவர்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.

4. உத்யத்பாநுஸஹஸ்ரேண நயநத்ரயசோபிதே!
சந்த்ரசூடே மகாதேவி அந்நபூர்ண நமோஸ்து தே

பொருள் : ஆயிரக்கணக்கான சூரியன்கள் உதிப்பதற்கு நிகரான மூன்று கண்களோடு பிரகாசிப்பவளும், பாதி சந்திரனைத் தலையில் அணிந்தவளும், பெருகிய ஒளியையுடையவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.

5. விசித்ரவஸநே தேவி அந்நதாநரதேநகே
சிவந்ருத்ய க்ருதாமோதே அந்நபூர்ணே நமோஸ்து தே

பொருள் : பல நிறங்கள் கொண்ட ஆடை அணிந்தவளும், ஒளி மயமாகத் திகழ்பவளும், அன்னதானம் செய்வதிலேயே திளைத்திருப்பவளும், மாசற்றவளும், பரமசிவனுடைய சந்தியா தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைபவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.

6. ஸாதகாபீஷ்டதே தேவி பவதுக்கவிநாசிநி
குசபாரநதே தேவி அந்நபூர்ணே நமோஸ்து தே

பொருள் : உபாசகனுக்கு விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், ஒளிமிக்கவளும், பிறவித் துன்பத்தைத் துளைப் பவளும் எங்கும் பரவிய ஒளியுடன் பிரகாசிப்பவளுமான அன்ன பூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.

7. ஷட்கோணபத்மமத்யஸ்தே ஷடங்கத்யுதிகோமளே
ப்ரஹ்மாண்யாதிஸ்வரூபே ச அந்தபூர்ணே நமோஸ்து தே

பொருள் : ஆறு கோணங்கள் கொண்ட தாமரை வடிவமாக உள்ள யந்திரத்தின் நடுவில் அமர்ந்தவளும், ஆறு அங்கங்களின் ஒளியினால் அழகாக இருப்பவளும், ப்ரஹ்மாணீ முதலிய தேவதைகளின் வடிவமாக அமைந்தவளுமான அன்னபூர்ணா தேவியே உனக்கு நமஸ்காரம்.

8. தேவி சந்த்ரக்ருதாபீடே ஸர்வஸாம்ராஜ்யதாயிநி
ஸ்ர்வாநந்தகரே தேவி அந்நபூர்ணே நமோஸ்து தே

பொருள் : ஒளி பொருந்திய, பாதி சந்திரனை அலங்காரமாக அணிந்திருப்பவளும், பெருகிய சாம்ராஜ்யத்தை அளிப்பவளும், பெருகிய ஆனந்தத்தை அடையச் செய்பவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.

9. இந்த்ராத்யர்ச்சிதபாதாப்ஜே ருத்ராதே ரூபதாரிணி
ஸர்வஸம்பத்ப்ரதே தேவி அந்நபூர்ணே நமோஸ்து தே

பொருள் : இந்திரன் முதலிய தேவர்களால் அர்ச்சிக்கப் பெற்ற தாமரை போன்ற திருவடிகளை உடையவளும், ருத்திரன் முதலியவர்களின் வடிவத்தைத் தாங்கியவளும், எல்லா வகையான செல்வங்களையும் குறையாமல் கொடுப்பவளும், ஒளி பொருந்தியவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.

பலச்ருதி:

10. பூஜாகாலே படேத் யஸ்து ஸ்தோத்ரமேதத் ஸமாஹித
தஸ்ய கேஹே ஸ்திரா லக்ஷ்மீர் ஜாயதே நாத்ரஸம்சய

பொருள் : எவன் ஒருவன் பூஜை செய்யும்போது இந்தத் துதியை நிலைத்த மனதுடன் படித்து வருகிறானோ, அவனுடைய வீட்டில் செல்வம் (ஐஸ்வர்யம்) உண்டாகி நிலைபெற்றிருக்கும். இதில் சந்தேகமே இல்லை.

11. ப்ராத: காலே படேத் யஸ்து மந்த்ரஜாபபுர: ஸரம்
தஸ்யாந்தஸம்ருத்திச்ச ஸ்யாத் வர்தமாநா திநேதிநே

பொருள் : எவன் ஒருவன் காலை வேளையில் மந்திரஜபம் செய்துகொண்டு அன்னையின் முன்னிலையில் இந்தத் துதியைப் படித்து வருகிறானோ, அவனுக்கு ஒவ்வொரு நாளும் அன்னத்தினுடைய நிறைவும் உண்டாகிறது.

12. யஸ்மை கஸ்மை ந தாதவ்யம் ந ப்ரகாச்யம் கதாசந
பரகாசாத் கார்யஹாதி: ஸயாத் தஸ்மாத் யத்நேந கோபயேத்

பொருள் : இந்தத் துதியைக் கண்டவனுக்கும் கேட்டவனுக்கும் கொடுப்பது கூடாது. ஒரு பொழுதும் வெளியிடுவதும் கூடாது.

No comments:

Post a Comment