Sunday, October 12, 2014


வேதாரண்யம் துர்க்கை அம்மன் கோவில்




ஸ்தல வரலாறு
வேதாரண்யம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவைகளில் பிரசித்தி பெற்றது. சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் இங்கு வந்து தேவார பதிகங்கள் பாடி கதவை திறந்ததாக வரலாறு.

இப்படி பிரசித்தி பெற்ற இத்தலத்தில் தெற்கு முகமாக திரிபங்கி வடிவில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபியாக துர்க்கையம்மன் காட்சியளிக்கிறாள். இந்த துர்க்கையம்மனை ஏராளமான பெண்கள் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகுகாலத்தில் எலுமிச்சைப் பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். 

குழந்தை பாக்கியம் பெற்றவர்களும், திருமணம் நிச்சயமானவர்களும் மீண்டும் இந்த அம்மனை வணங்குவதற்கு வருகை வந்து மாதிரி தொட்டில் செய்து வந்து சன்னதியில் கட்டுவதும், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அன்னதானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அனைத்து கோவில்களிலும் துர்க்கையம்மன் கோர ரூபமாக வடக்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் தெற்கு முகமாக சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.

No comments:

Post a Comment