Sunday, October 12, 2014

திருமணத்தடைகளை தகர்க்கும் துர்க்கை அம்மன்






வழிபாடு 


வண்ணாரப்பேட்டை, மணலி சின்னையா முதலி தோட்டத்தில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் துர்கா லட்சுமி தேவஸ்தானம் உள்ளது. சுமார் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில், விநாயகர், துர்க்கை, முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், ஆஞ்சநேயர், நவக்கிரக, ஐய்யப்பன் சன்னதிகள் உள்ளன. 

இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரந்தோறும் செவ்வாயன்று திருமணமாகாத பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி விழா வைகாசி விசாகம், சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். ஐய்யப்பனுக்கு இருமுடி கட்டிக் கொண்டு வருடந்தோறும் இங்கிருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், வருடந்தோறும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். கோயில் நண்பர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 13 அடி உயர விநாகர் சிலை வைத்து வழிபடுவர். 

கோவிலுக்கு செல்லும் வழி 

வண்ணாரப்பேட்டை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment