Wednesday, October 1, 2014

அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்த சக்தி மிக்கது, இங்கிலாந்து அறிஞர் – ஆச்ச‍ரிய தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்த சக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்ப தை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய் தார்.
அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆ ண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார்.
அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறை யாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிச யத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜைய றையில் பத்திரமாக வைப்போம்.

No comments:

Post a Comment