Friday, October 10, 2014

அம்பாளின்உருவமான ஸ்ரீசக்கரத்தழிபடுங்கள்




பிறவாமை வேண்டும், முக்தி பெற வேண்டும் என்ற ஆசை எல்லாரது மனதிலும் எளிதில் வந்துவிடாது. பிறவாமைக்கு பிறகு நமக்கு, நம் ஆத்மாவுக்கு என்ன நிலை ஏற்படும் என்று சிலர் யோசனை செய்யக்கூடும். 

கவலையேப்படாதீர்கள் எப்போது நம் ஆத்மாவுக்கு பிறவாமை கிடைக்கிறதோ, அப்போதே நம் ஆத்மா ஜனை, மரணச் சுழலில் இருந்து விடுபட்டு பிரம்மம் ஆக மாறிவிடும். கடவுளின் காலடியில் இளைப்பாறும் நிலை ஏற்படும்.

இந்த பாக்கியத்தைப் பெற ஒவ்வொரு வரும், ஒவ்வொரு வழியில் முயல்கிறோம். ஆனால் அம்பிகையால் மட்டுமே இந்த அனுக்கிரகத்தை தர முடியும் என்று ஆதிசங்கரர் சொல்கிறார். இது தொடர்பாக அவர் சவுந்தர்ய லஹரியில் கூறி இருப்பதாவது:-

``அம்மா, ஒன்பது சுற்றுக்களை பிரகாரங்களாகக் கொண்ட உன் இருப்பிடத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரபிரம்ம உருவமான ஈசனிடம் நீ சேர்ந்து இருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் தகுதி இல்லை.

வெளியே 9 சுற்றுக்களையும் தாண்டி உள்ள வாசலில் தான் எல்லாரும் காத்து கிடக்கிறார்கள். அவர்களுக்கு வெளிவாசலில் காவல் செய்யும் அகிமா முதலிய சித்திகளே அஷ்ட மகா சித்திகளை கொடுத்து விடுகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.

இந்த 9 சுற்று பிரகாரங்களே ஸ்ரீசக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இதை `அம்பாள் யந்திரம்' என்றும் சொல்வார்கள். உலகை ஆளும் பராசக்தி திவ்யமங்கல உருவத்துடன் இந்த யந்திர உருவத்தில் இருக்கிறாள். ஸ்ரீசக்கரத்தை பார்க்கும் போது கோடுகளும், எழுந்து கலுமாகத்தான் தெரியும்.

ஆனால் அதை அம்பாளின் உருவமாக வேண்டும். ஸ்ரீ சக்கரத்தில் ஆவணரங்கள் என்ற 9 சுற்றுக்கள் இருக்கின்றன. இந்த 9 சுற்றுக்களில் 9 தேவதைகள் உள்ளனர். இவர்களும் பராசக்தியின் அம்சங்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஸ்ரீசக்கரத்தின் மையப்பகுதியில் உள்ள ``பிந்து'' என்ற புள்ளிதான் பராசக்தி ஆவாள். அவளை சுற்றியுள்ள 9 ஆபரணங்களும் 9 கோட்டையாகும். இந்த ஸ்ரீ சக்கரத்துக்கு தினமும் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அப்போது லலிதா சகஸ்ரராமத்தை சொல்ல வேண்டும். இது அளவற்ற பலன்களைத்தரும். ஸ்ரீசக்கரத்தை லலிதா சகரஸ்நாமம் உச்சரித்தப்படி, பூ போட்டு, குங்குமம் அர்ச்சனை செய்தால் அம்பிகை மனம் குளிரும்.

நீங்கள் கேட்பதை எல்லாம் அம்பிகை குறைவின்றி அள்ளி, அள்ளித்தாருங்கள். எனவே அம்பாளின் உருவமான ஸ்ரீசக்கரத்தை வழிபட மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment