Monday, October 13, 2014

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரம்



 மூவேளையும் முக்கண் முதல்வனை, உரிய துதிப்பாடல்களால் தொழுது வணங்கிட, நம் இல்லங்களில் சகல வளங்களும் பெருகும்.

இங்கே உங்களுக்காக, பதஞ்சலி முனிவர் அருளிய ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரத்தின் ஒரு பாடல்…

ஸுவர்ணபத்மினீ தடாந்ததிவ்ய ஹர்ம்யவாஸினே
  ஸுபர்ணவாஹனப்ரியாய ஸூர்யகோடி தேஜஸே
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ரதாரிணே
  ஸதா நமஸ்ஸிவாய தே ஸதாஸிவாய ஸம்பவே

கருத்து: தங்கத் தாமரை நிறைந்த குளத்தின் கரையில் உள்ள ஸர்வோத்தமமான கோயிலில் வசிப்பவரும் கருடனை வாகனமாக உடைய மஹா விஷ்ணுவிடத்தில் ப்ரீதி உள்ளவரும், கோடி சூரியர்களுடைய ஒளியை உடையவரும், மீனாட்சியுடன் விளையாடுகிறவரும் ஸர்ப்பராஜனை சிரசில் தரித்திருக்கின்றவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்போதும் மங்களத்தைக் கொடுக்கிறவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்போதும் நமஸ்காரம்.

இந்த ஸ்லோகத்தைக் கூறி சிவபெருமானை வழிபட ஆரோக்கியம், ஆயுள், ஸம்பத்து முதலான சகல பாக்கியங்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment