தினம் ஒரு திருப்புகழ் - அன்பு பெற
ராகம் : சரஸ்வதி / பஸந்த் தாளம் :சதுச்ரஏகம்
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
கருத்துரை:
திருமால் மருகரே! கடல் மீது வேலை
எரிந்தவரே! சிவகுருநாதரே!
செந்திலாண்டவரே! மாதர் மயக்கத்தில்
வீழ்ந்து தவியாது, அடியேனை இன்புடனும்,
அன்புடனும், ஆட்கொண்டு அருள்வீர்.
No comments:
Post a Comment