Saturday, October 4, 2014

குரு


குரு

பிரபலமான சிவாலயங்களில் எல்லாம் தெற்குப் பக்கத்தில் தெட்சிணா மூர்த்தியை காணலாம்.சிவாலயத்தில் கருவறைக்குள் லிங்க சொரூபத்தொடு ஈசன் இருக்கும் பொது அந்தக் கருவறையைக் சுற்றியுள்ள சுவரில் வெளிபக்கமாக தெற்கு பார்த்து தெட்சிணா மூர்த்தி என்கிற பெயரில் இறைவன் சிவன் அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம் .அப்படியே நேர் பின்னால் திருமாலும் ,பிரம்மனாலும் அடி முடி காணமாட்டாத நிலையில் லிங்கோத்பவராகவும்,வடக்குப் பக்கம் துர்க்கையாகவும் அதே ஈசனின் அருள் வெளிபடுவதையும் பார்க்கலாம்.இங்கே இந்த தெட்சிணாமூர்த்தி கோலம் என்பது குருவின் கோலம்.அதாவது ஞானமளிப்பது .வடதிசை என்பது குபேர திசை..வாழ்க்கைக்கு தேவையான செல்வங்களில் பொருட் செல்வமும் ஒன்றல்லவா.அதை நல்கும் திசை ...அந்த திசையில் அதை நோக்கி தான் குபேர புரி இருக்கிறது.தெற்கு திசையில் அதை நோக்கி தெட்சிணாமூர்த்தி(தென்பகுதி)
மூர்த்தியாக ஈசன் அமர்ந்திருப்பதன் நோக்கம் அருட் செல்வத்தை வரி வழங்குவதற்காக தான்.

அது மட்டுமல்ல...ஒருவர் ஜாதகத்தில் குரு என்கிற கோளின் பங்கு மிக முக்கியம்."குரு பார்க்க கோடி நன்மை"என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறோம்.ஆண்டிற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக சஞ்சாரம் செய்யும் குருவானவர் சாதகமாகவும்,பாதகமாகவும் தன செல்லும் ராசி வீட்டிற்கு ஏற்பவும் ,ஒருவர் பிரக்கும்போது இருந்த கல நிலைகளுக்கு ஏற்பவும் துணை செய்பவர்.

அப்படிப்பட்ட குரு மிக பாதகமாக சிலர் ஜாதகத்தில் இருந்து விடும் அமைப்பும் உண்டு.அப்படி பாதகமாக அமையப் பெற்றவர் பிற கோள்கள் ஒத்துழைத்தாலும் மிகவும் சங்கடங்கலை அனுபவித்துக் கொண்டிருப்பார்.

சில நேரங்களில் தற்கொலை எண்ணமெல்லாம் தலை எடுக்கும்.இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு உதவவே சிவன் குருவாய் -தெட்சிணா மூர்த்தியாய் கோலம் கொண்டு சிவாலயங்களில் தென்திசை நோக்கி அமர்திருக்கிறார்.

ஒரு விதத்தில் தெட்சிணா மூர்த்தி மூர்த்திமானது பரிகார மூர்த்தம்,ஞான மூர்த்தம்,அருள் மூர்த்தம்,மருந்து போன்ற மூர்த்தமாகும்.சிவாலயம் செல்பவர்கள் இந்த மூர்த்தியை மிகுந்த மன அடக்கத்தோடு வணகி குரு காயத்ரி மந்திரத்தை கூறி தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி எல்லா வகையிலும் வல்லமையும் தனிக் கருணையும் கொண்டு பிரத்யோகமககுருவின் குணத்தோடு அமர்ந்திருக்கும் ஈசனுக்கு எதிர் சாரியில் தான் பெரும்பாலான ஆலயத்தில் அறுபத்தில் ,மூன்று நாயன்மார்களும் ,ருத்ரர்,வீரபத்ரர் ,பைரவர் போன்ற சிவகணங்களும் அமர்ந்து சாதிப்பார்கள்.
(விதி விலக்காக சில ஆலயங்கள் இருக்கலாம்)

இந்த வரிசையில் ஏழு கண்ணிகள் ப்ரஹ்மி , மாஹேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி , வராஹி,இந்திராணி,சாமுண்டி என்கிற பெயர்களில் அமர்ந்திருப்பார்கள்.இவர்கள் தான் சப்த கண்ணிகள்.குருவை வணங்கி விட்டு இவர்களையும் வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment