மகிஷாசுரனுடன் ஒன்பது நாள் போராடி வெற்றி பெற்ற அம்பாள், ஓய்வு எடுக்க சயனகோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் கடற்கரை ஓரமாக காற்று வாங்க தங்கினாள் . அவளது பெயரால் இந்த ஊர் 'தேவிபட்டினம்' என பெயர் பெற்றது. அம்பிகை கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள் பாலிக்கிறாள் இவளை உலகநாயகி என்ற திருநாமம் இட்டு அழைக்கிறார்கள் .
இத்தல அம்மனுக்கு உருவம் எதுவும் கிடையாது. அடையாளம் தெரிவதற்காக ஒரு முகத்தை மட்டும் வைத்துள்ளனர். அம்மனின் சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜ மாதங்கி சியாமளா பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகா பீடம் என்பது போல், தேவிபட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாக உள்ளது. ராவண வதத்திற்கு முன் ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் இத்தலத்து அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது 5 நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரமும் மூலவருக்கு மேல் ஏகதள விமானமும், கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தமும் இருக்கிறது.
எடுத்த செயலில் வெற்றி பெற இத்தலத்து அம்பாளை வணங்கி வரலாம்.
இருப்பிடம்:- ராமநாத புறத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தேவிபட்டினம் காந்தி நகர் ஸ்டாப்பில் இரங்கி 1/2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோயில்.
திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 8 மணி வரை
No comments:
Post a Comment