Friday, October 10, 2014

மந்திரங்கள்


 சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம்சாத்திரம் என
 இருவகையாகப் பகுத்துள்ளனர்.தோத்திரம் அன்பின் அடிப்
 படையில் எழுவதுசாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.
                                             
 
 தோத்திரம்
 
 இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் 
 சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு  ஆக்கை 
 ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் 
 எனப்படும்.
 
   சாத்திரம்
 
 சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால்
  இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும்
  உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க
  ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும்.
 
 இவ்விரு வகையிலும் பல நூல்கள் இருப்பினும் சைவ
 உலகில் சமயாச்சாரியர் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் அருளிய
 12 திருமுறைகளே சிறப்பாகத் தோத்திரங்கள் எனப் போற்றப்
 பெறுவன.
 
 இதேபோல் சந்தானாச்சாரியர் உள்ளிட்ட அறுவர் அருளிச் 
 செய்த பதினான்கு நூல்களே சாத்திரங்கள்.
 
 இந்த அடிப்படையில் பார்த்தால்திருமூலர் அருளிச் செய்த
 திருமந்திரம் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம்
  உள்ளனஇது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.
 
 மந்திரங்கள் எழுகோடி  என்றால் ஏழு கோடி மந்திரங்கள்
  என்பது பொருள் அல்லஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள்
  என்பதே பொருளாகும்.
 
  எழுகோடி மந்திரங்கள்
 
  நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
 
    சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
 
  சுவதா - தைரியம்வசீகரம் கொடுப்பது.
 
   பட் -  விக்கினங்களைத் துரத்துவது.
 
   உம்பட் - காமாதிகளைப் போக்குவது.
 
   வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
 
   வஷட் - தேவதைகளை வசம் செய்வது.
 

No comments:

Post a Comment