Thursday, October 9, 2014

“அம்பரான் சோமாசிமாறன் அடியார்க்கும் அடியேன்”
“அம்பரான் சோமாசிமாறன் அடியார்க்கும் 
அடியேன்”
"ஆன்மீகப் பெருமக்களுக்கு வணக்கம்"
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். 
முதலில் அவரின் அடியார்களின் பெருமையை 
உணர வேண்டும். சிவ அடியார்களின் 
பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய 
புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று 
நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் 
ஒருவர் தொகுத்தே இது.
"எத்தன்மையர் ஆயினும் 'ஈசனுக்கு அன்பர்' 
என்றால்அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர்' 
என்று கொள்வார்;
'
சித்தம் தெளியச் சிவன் அஞ்சு எழுத்து ஓதும் 
வாய்மை
நித்தம் நியமம்' எனப் போற்றும் நெறியில் 
நின்றார்."
எத்தன்மையராயினும் அவர் சிவபெருமானுக்கு 
அன்பர் என்றால், அத்தன்மை உடையவர்தாம், 
நம்மை ஆள்பவர்' என்று கொண்டிடும் 
திறமுடையார், தம்முடைய சித்தம் தெளிவு 
கொண்டிடச் சிவபெருமானின் நாமமாம் `
நமச்சிவாய' எனும் திருவைந்தெழுத்தை ஓதும் 
வாய்மை ஒழுக்கத்தை, நாளும் தவறாமல் 
செய்வதைக் கடமையாகப் போற்றும் நெறியில் 
தலை நின்றார்.

#சோமாசிமாற_நாயனார்_புராணம்:-
சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் 
என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே 
தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் 
சிவனடியார்களுக்குத் திருவமுதளித்து 
ஆதரிக்கும் சிறந்த பண்புடையவராக அவர் 
விளங்கினார் 
உமையொரு பாகனாகிய சிவபெருமானையே 
முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் ப
லவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி 
செய்தார்.
ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குணம், எக்குலம் 
எத்தன்மையராயினும் அவர்கள் தன்னை 
ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் 
தெளிந்திருந்தார்
சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த 
நியமம் உடையவராயிருந்தார் இறைவனை 
எப்போதும் நினைந்து நினைந்து உருகும் இவர் 
தம்பிரான் தோழராகிய நம்பியாரூரருடைய 
பெருமையைக்கேட்டு அவர் மீது அளவற்ற அன்பு 
கொண்டார் .
சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை 
அடைந்து தம்பிரான் தோழராகிய 
வன்தொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய 
நண்பரானார் திருவாரூரில் ஐம்புலச் 
சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் 
குற்றங்களையும் நீக்கிய இவர் திருவாரூரில் 
தங்கிஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றி 
குருவருளும்திருவருளும் பெற்று சிறப்பினால் 
என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்.
‪#‎இறைவன்‬: பிரமபுரீஸ்வரர்
‪#
இறைவி‬: பூங்குழலம்மை
‪#‎
முக்தி_தலம்‬: திருவாரூர்
‪#‎
குருபூசை_நாள்‬: வைகாசி - ஆயில்யம்

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "
திருச்சிற்றம்பலம்''

No comments:

Post a Comment