திருமணம் கைகூட காத்யாயினி விரதம்
இறைவனைத் திருமணம் புரிய உமையம்மை தவமிருந்து தம் எண்ணம் ஈடேறப் பெற்ற தலமாதலால், திருமணமாகாத பெண்கள் திருவீழிமிழலை தலத்திற்கு வந்து கல்யாணசுந்தரருக்கு மாலை அணிவித்து சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலையில் எழுது நீராடி,
“தேவேந் திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரிய பாமினி
விவாகபாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹிமே பதிம்தேஹி
சுதம்தேஹி சௌபாக்யம் தேஹி
மேசுபெ சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
தேஹிமே சிவசுந்தரி காத்யாயினி
மகாமாயே மகாயோகிந்தீஷ்வரி
நந்தகோப சுதம் தேவம் பதிம்மே
குருதே நமஹ நமஹ’
என்ற சுலோகத்தை பக்தியோடு ஓதிவந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்று திருவீழிமிழலை தல மான்மியம் கூறுகிறது. நல்ல கணவனை அடைய வேண்டுமென்று நினைப்பவர்கள் காத்யாயினி விரதம் மேற்கொள்ளவேண்டும்.
திருவீழிமிழலையில் காத்யாயினியாக வந்த உமாதேவி நோற்ற நோன்பு இது. இந்த விரதத்திற்குத் தலைவியும் அவளே! சீதாதேவி காத்யாயினி விரதமிருந்தே ராமனை கணவனாக அடையப்பெற்றாள் என்கிறது துளசி ராமாயணம். ருக்மிணி இந்த விரதமிருந்து கிருஷ்ணனை கணவனாகப் பெற்றாள் என்கிறது பாகவதம்.

No comments:
Post a Comment