Saturday, October 4, 2014

சுவாதி விரத மகிமை


சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார். 

மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாகலாம். 

சுவாதி நட்சத்திரம் அன்று உணவு அருந்தாமல் விரதமிருந்து அன்று மாலை கோவிலுக்கு சென்று நரசிம்மரை நெய் தீபம் ஏற்றி வணங்கி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

No comments:

Post a Comment