Sunday, October 12, 2014

மேட்டுநீரேத்தான் துர்க்கையம்மன் திருக்கோயில், மதுரை



ஸ்தலத்தின் வரலாறு:
ஐநூறு வருட பழமை வாய்ந்தது. கோயில் அருகே இரண்டு குளங்கள் இருந்தன. பக்தர்கள் பயன்படுத்தும் குளத்தில் இருந்து துர்க்கையம்மன் சிலை சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதை எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கினர். ஆரம்பத்தில் குடிசையில் இருந்தது. மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயிலும், இக்கோயிலும் ஒரே நேரத்தில் உருவானது. குலசேகரபாண்டிய மன்னர் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது

ஸ்தலத்தின் பெருமைகள்:

பழமையும், புராதன சிறப்பும் மிக்கது. இக்கோயிலில் மட்டுமே துர்க்கைக்கு தனி சன்னிதானம் அமைந்துள்ளது. அம்மன் வடக்கு பார்த்து இருப்பது சிறப்பு அம்சம். 

அம்மனின் சிறப்பம்சம்:

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு வாடிப்பட்டி நீரேத்தானில் அம்மன் சிலை மண்ணில் தயாரித்து, அங்கிருந்து மேட்டுநீரேத்தான் கோயிலுக்கு கொண்டு செல்வர். அங்கு இரவு 12 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது சிறப்பம்சம். 



நடைபெறும் திருவிழாக்கள்:

பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகத்திருவிழா, ஆடி மாதம். நவராத்திரி

ஸ்தலத்தின் சிறப்புகள்:

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு வாடிப்பட்டி நீரேத்தானில் அம்மன் சிலை மண்ணில் தயாரித்து, அங்கிருந்து மேட்டுநீரேத்தான் கோயிலுக்கு கொண்டு செல்வர். அங்கு இரவு 12 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது சிறப்பம்சம்.

கோவில் நடைதிறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

பொதுவான தகவல்:

கோயிலில் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது, உள்ளே கொடிமரம், மகாமண்டபம், கோயில் வெளியே திருக்குளம் அமைந்துள்ளது. 

கோவிலில் செய்யப்படும் பிரார்த்தனைகள்:

திருமணம் ஆகாத பெண்கள் ஐந்து வகை எண்ணெய் விளக்கில் சிவப்பு திரி போட்டு ஒன்பது வாரம் தொடர்ந்து விளக்கு ஏற்றி வந்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

செலுத்தப்படும் நேர்த்திக்கடன்கள்:


அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், மாதம் தோறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்தது. சித்ரா பவுர்ணமி அன்று 1008 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தொழில் அபிவிருத்தியாகும் என்பதும், வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு எலுமிச்சை பழத்தை அம்மனின் சூலாயுதத்தில் குத்தி வைத்து பூஜை செய்த பின் வீட்டிற்கு எடுத்து சென்று சாறு எடுத்து அருந்தினால் வயிறு உபாதைகள் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment