Thursday, October 9, 2014

காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு பாடல்



சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும் 
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்! 
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும் 
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்! 
முத்தாம் ரத்தினம் முழுமலர் 
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே! 
புத்தி பலம்பெற பொன்பொருள் 
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!


இந்த சந்திரன் வழிபாட்டு பாடலைச் சொல்லி சந்திரனை வழிபடுவதால், நாம் செய்யப் போகும் காரியங்களில் ஏதேனும் காரியத்தடை அல்லது இடையூறுகள் இருப்பினும் அவைகள் நீங்கப் பெற்று செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமாகும். ‘மனது காரகன்’ மற்றும் ‘மாதா காரகன்’ என்று அழைக்கைப்படுபவர் சந்திரன் ஆவார். எனவே, இந்தப் பாடலைச் பாடி சந்திரனை வணங்குவதால் சிந்தித்த காரியங்கள் குறையேதும் இன்றி வெற்றிகரமாய் அமையும். மனமகிழ்ச்சியும் நிறைவும் வாழ்வில் என்றும் நிலைக்கும்.

No comments:

Post a Comment