கருட தரிசனம் :
மஹா விஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானது ஆகும்.விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் :பெரிய திருவடி"என்று அழைக்கபடுகிறார்.இவர் பெருமாளின் வாகனமாகவும் , கொடியாகவும் விளங்குகிறார்.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது , "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும்விளங்குவாய் ' என்று வரமளித்தார்.கருட தரிசனம் சுப சகுனமாகும்.
கருடன் மங்கள வடிவினன்.வாகனத்தில் கருடன் வட்டிமிடுவதும்,சத்தமிடுவதும் நல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவிலில் கும்பாபிஷேகம் ,யாகம் , சிறப்பு நடக்கும்போது ,கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
உலகளந்த பெருமாள் வாகனம் ,உலகை காக்க தர்மத்தை நிலை நட்ட பிறவி எடுக்கும் பகவன் அமரும் பீடம் கருட தேவன்.
கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் கருடன் வரமாட்டார்.கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது.கருட தரிசனம் பாபவிமோஷனம்.அவ்வளவு எளிதில் கருடனை காண முடியாது.
No comments:
Post a Comment