ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.அதன் தாத்பரியம் என்ன:
பகவானுக்கு செய்யப்படும் காரியமும் நமது மகரிஷிகள் அனுஷ்டனத்தில் கூறியுள்ளவைகள் ஆகும். சரத்ருதுவில் (ஐப்பசியில்) 'ஆக்ரயனஸ்தா லீபாகம்' என்று ஒரு யாகத்தை வீட்டிலேயே செய்யும்படி பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.
அதாவது புது நெல் வந்த உடன் முதலில் அந்த நெல் முழுமையாக உருவாக உதவிய தேவதைக்கு அந்த அன்னத்தை நிவேதனம் செய்து,அதன் பிறகு நாம் சாப்பிட வேண்டும் என்பதே அந்த யகத்தின் பொருளாகும்.இந்தக் கருத்தை மனதில் கொண்டு அனைவரும் இந்த யாகத்தைச் செய்யப் போவதில்லை.செய்யவும் இயலாது.
ஆனால் வடித்த அன்னத்தைக் கொண்டு சிவபெருமானின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தால் அதை தரிசனம் செய்யும் போது அனைத்து நன்மையையும் அடைவர்கள் என்று கூறப்படுகிறது
No comments:
Post a Comment