அன்னதானம் செய்வதால் என்ன கிடைக்கும் என்று சிவ வாக்கியர் தன் பாடலில் விளக்கி இருக்கிறார் அந்த பாடல் இதுதான் ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்யும் தருமமும் சாடி விட்ட குதிரை போல் தருமம் வந்து நிற்குமே சிவ வாக்கிய சித்தர் பாடல் இதன் பொருள் தருமம் செய்வது போல் ஒரு செயல் இல்லை என்றும், தர்மம் தான் நம்முடைய இம்மைக்கும் மறுமைக்கும் துணை நிற்கும் என்றும் தெரிவிக்கிறார். அதிலும் உணவு கொடுப்பது (அன்னதானம் ) தான் உகந்தது என்றும் அறுதியிட்டு கூறுகிறார் .
No comments:
Post a Comment