Saturday, October 4, 2014

வேதம் & திருமுறை




சிவமயம்
வேத சாஸ்திரங்களுக்கும் திருமுறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
பஞ்ச பூதங்களைப்பற்றி தேவாரம் திருவாசகத்தில் கூறப்பட்டிருக்கும் சில கருத்துக்களை அறியலாம்.
திருவாசகத்தில்போற்றித் திருவகவல் என்ற பகுதியில் 

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி!(5)

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!(4)

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய்போற்றி!(3)

வெளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!(2)

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!(1) என்றும்

திருநாவுக்கரசர் திருப்புள்ளிருக்கு வேளுர் திருத்தாண்டகத்தில்

1.மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு

2.வீசும் கால்தன் அகத்தில் இரண்டாம் செந்தீத்

3.தன் உருவில் மூன்றாய்த்

4.தாழ்புனலின் நான்காய்த்

5.தரணி தலத்து அஞ்சாகி என்றும் திருமுறையில் காணப்படுகிறது.

இதையே வேத ஆகம முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் இந்த பஞ்சபூதங்களுக்கு என்று பஞ்சபிரம்ம மந்திரங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

அவை,

ஐந்து முகங்கள் கொண்ட தீபம் ஈசானம் என்றும்,(5)

நான்கு முகங்கள் கொண்ட தீபம் தத்புருஷம் என்றும்;,(4)

மூன்று முகங்கள் கொண்ட தீபம் அகோரம் என்றும்,(3)

இரண்டு முகங்கள் கொண்ட தீபம் வாமதேவம் என்றும்,(2)

ஒரு முகம் கொண்ட தீபம் ஸத்யோஜாதம் என்றும்,(1)
தீபாராதனை செய்யப்படுகிறது.

இவற்றின் முழு மந்திரங்கள் பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்று வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் எண்ணிக்கைகள் ஏறு வரசையிலும், இறங்கு வரிசையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

No comments:

Post a Comment