Sunday, October 12, 2014

வேலூர் மாவட்டத்தில் ஒரு சின்ன திருப்பதி...

திருப்பதி மலையில் இருக்கும் பெருமாளை போலவே மிக அழகாக பக்தர்களுக்கு காட்சி தந்துக்கொண்டிருக்கிறார் குடியாத்தம் பகுதியில் இருக்கும் மீனூர் மலை வெங்கடேச பெருமாள்.
வேலூர் மாவட்டம்குடியாத்தத்தில் இருந்து சுமார் கி.மீ. தொலைவில் மீனூர் மலை கோவில் அமைந்துள்ளது. இந்த வெங்கடேச பெருமாள் கோயில் சுமார் 700ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டிருக்கிறதுஇது பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களாக, கோயில் சுவர்களில் மீன் சின்னங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறதுமேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்ஆராய்ச்சி செய்தும் இக்கோயிலின் வரலாற்றை அறிய முடியவில்லை
ஆரம்ப நாட்களில் இக்கோயிலுக்கு பாதைகள் இல்லை. ஒத்தையடி பாதைதான் இருந்திருக்கிறதுஅங்கு வந்து வழிபட்ட ஒரு மகரிஷி தான்இக்கோயிலுக்கு பாதையை உருவாக்கியிருக்கிறார்அவரது சமாதிகோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கிறதுதற்போது அந்த சமாதியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் இருக்கும் பெருமாளைவிட, இங்கு உள்ள பெருமாளின் சிலை உருவத்தில் பெரியதுபெருமாளின் திருவுருவம் 9அடி ஆகும் இவரின் வலது கை சின்னதாக இருக்கும்மேற்கு பார்த்து அருள்பாலிக்கும் இந்த பெருமாளுக்கு எந்தவிதமான ஆதார பீடம் இல்லாமல், பூமியில் கால் பதித்தவாறு நிற்கிறார்புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்புரட்டாசி மாதம் மற்றும் மற்ற சனிக்கிழமைகளின் இரவு 11 மணி வரை நடை திறந்து இருக்கும். தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திராகர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கிறார்கள்பெருமாளின் இடது பக்கத்தில் பத்மாவதி தாயார் காட்சி அளிக்கிறார்மிகப் பழமையான ஆலமரம் இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறது
இன்றளவும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு இது சின்ன திருப்பதியாகத்தான் திகழந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment