ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்
ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.
ஐந்தாக அமைந்தவைகள்
* பஞ்சபுராணம் –
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
* பஞ்ச கங்கை –
ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம கங்கை.
* பஞ்சாங்கம் –
திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
* பஞ்ச ரிஷிகள் –
அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.
* பஞ்ச குமாரர்கள் –
விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.
* பஞ்ச நந்திகள் –
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,
* பஞ்ச மூர்த்திகள் –
விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.
* பஞ்சாபிஷேகம் –
வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் , விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
* பஞ்ச பல்லவம் –
அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.
* பஞ்ச இலைகள் – வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.
* பஞ்ச உற்சவம் –
நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
* பஞ்ச பருவ உற்சவம் –
அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.
* பஞ்ச பூதங்கள் –
நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.
* பஞ்ச சபைகள் –
ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.
* பஞ்ச ஆரண்யம் –
உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.
* பஞ்ச முகங்கள் (சிவன்)- தத்
புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.
* பஞ்ச முகங்கள் (காயத்திரி)-
பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.
* பஞ்ச மாலைகள் –
இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.
* பஞ்சமா யக்ஞம் –
பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.
* பஞ்ச ரத்தினங்கள் –
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
* பஞ்ச தந்திரங்கள் –
மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.
* பஞ்ச வர்ணங்கள் –
வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
* பஞ்ச ஈஸ்வரர்கள் –
பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.
* பஞ்ச கன்னியர்கள் –
அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
* பஞ்ச பாண்டவர்கள் –
தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
* பஞ்ச ஹோமங்கள் –
கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.
* பஞ்ச சுத்திகள் –
ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.
* பஞ்ச கோசம் –
அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
* பஞ்ச காவ்யம் (பசு)-
பால், தயிர், நெய், கோமியம், சாணம்.
* பஞ்ச லோகம் –
தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.
* பஞ்ச ஜீவநதிகள் –
ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.
* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) –
சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.
* பஞ்ச நிலங்கள் –
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
* பஞ்ச காப்பியங்கள் –
மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.
* பஞ்சமா பாதகங்கள் –
காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.
* பஞ்ச சயனம் –
அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.
* பஞ்ச புராண ஆசிரியர்கள் –
நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.
No comments:
Post a Comment