Thursday, September 25, 2014

வாழைப்பழம் வாழ்க !

banana(1)green
வாழையின் மருத்துவ குணங்கள் என்ன?
கட்டுரை எண் 932 தேதி மார்ச் 26, ஆண்டு 2014.
எப்போதோ ‘மூலிகை மணி’ என்ற பத்திரிகையில் இருந்து எடுத்துவைத்த பேப்பர் கட்டிங்-ஐ மீண்டும் படித்தேன். பழுப்பு நிறக் காகிதம் கிழிந்துவிடும் போல இருந்தது. தூக்கிப் போட மனசில்லை. வாசகர்களுடன் பகிர்ந்தால் எழுதிய ஆசிரியரும் மனம் குளிர்வார் அல்லவா?
வாழ வைக்கும் வாழை
எழுதியவர்: மருத்துவப் புலவர் டாக்டர் ச. ஆறுமுகநாதன்
இலையின் குணம்
வாழை மரம் பார்த்திருப்பாய் தம்பி – அது
வழங்கும் நலம் சொல்லுகிறேன் கேள் தம்பி!
வாழை இலை போட்டு உண்ணு தம்பி — அது
வாதபித்தம் போக்குமடா தம்பி
banana_leaf
பூவின் குணம்
வாழைப் பூ இரத்த மூலம் போக்கும் – மேக
வெட்டை கைகால் எரிச்சல்களை நீக்கும்
கோழையோடு வயிற்றுக் கடுப்போட்டும்
மற்றும் குணபேதம் நீக்கி தாது ஊக்கும்
vazaipu
பிஞ்சின் குணம்
வாழைப் பிஞ்சு இரத்தக் கடுப்போட்டும்
வந்த மூலம் நீரிழிவை மாற்றும்
பாழாகா வயிற்றுப் புண்ணை யாற்றும் மூத்திரம்
பக்குவமாய் மிகப்படாமல் போக்கும்
banana benefits
காயின் குணம்
வாழைக்காயால் பித்த வாந்தி போகும், பைத்தியம்
வயிற்றளைச்சல் இருமல் சூடு நீங்கும்
சூழும் இரத்தம் அதிகரிக்கும் வாயில் – சும்மா
சுரந்திடும் நீர் நிற்கும் பசி தூண்டும்
பழத்தின் குணம்
வாழைப்பழம் பித்தப் பிணி ஓட்டும் – உடல்
வரட்சியாலே வெளுப்பதினை மாற்றும்
தாழச் செய்யும் கொழுப்பு மூர்ச்சை போக்கும், மேனி
தளராத வடிவத்தினைச் சேர்க்கும்
OLYMPUS DIGITAL CAMERA
கிழங்கு நீர் குணம்
வாழைக் கிழங்கில் ஊறும் நீரு — தட்பம்
வாய்ந்ததிது குளிர்ச்சி தரும் தம்பி
கோழையுடன் எலும்புருக்கி பாண்டு – மற்றும்
கொடிய வெப்ப நோயகற்றும் தம்பி
தண்டின் குணம்
வாழைத் தண்டு குடலில் சேர்ந்த கல்லை – வெளி
வரவழைக்கும் வேலை செய்யும் தம்பி
வாழைத் தண்டு சாற்றினாலே தம்பி – சிறுநீர்
வாதையெல்லாம் போகுமடா தம்பி
stem
கூட்டுப் பொரியல்
வாழைப் பூ, பிஞ்சு காய்கள் தண்டு – தினம்
வருவல் கூட்டுச் செய்து உண்ணு தம்பி
வாழவைக்கும், நோய்கள் பல நீக்கும் – இந்த
வகை தெரியார் உணரச் சொல்லு தம்பி
14 வகைகள்
வாழை வகை பதினான்கு உண்டும் – அதில்
வரும் செவ்வை, இரசுத்தாளி, வெள்ளை மொந்தை
வாழ்வளிக்கும் வகைகள்; கரு வாழை மேன்மை
வாய்ந்ததென்று சொல்லிடுவார் தம்பி
red-banana
உணவுக்குப் பின் பழம்
உணவுக்குப் பின் வாழைப்பழம் உண்ணுட மலம்
உடந்திளகிப் போகச் செய்யும் கண்ணு
குணத்தை நல்கி பலமளிக்கும் என்று, முன்னோர்
கூறியதை யானும் சொன்னேன் கண்ணு
red-banana-500x500

No comments:

Post a Comment