புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
செப்டம்பர் 17,2014
செப்., 21-ம் தேதி வரை தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கின்றன. இந்த பூஜைகளுடன் சகஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். செப்., 21-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு படிபூஜை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடைபெறுகிறது. 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்.,17-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படும்.

No comments:
Post a Comment