Thursday, September 18, 2014


புதுவை கோயிலில்
வன்னி மரத்தில் ஆஞ்ச நேயர் உருவம்
புதுச்சேரி.

புதுவை முத்தியால்பேட்டை சேன்சிமோன்பேட்டையில் செங்குந்த முதலியார் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர், சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயி லின் உள்ளே வன்னி மரம் உள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த மரம் இயற்கையாகவே முளைத்து வளர்ந்ததாகும். வன்னி மரத்தின் கீழ் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு விநாயகர் உருவம் தோன்றியது. தும்பிக்கை, இரண்டு காதுகள் என அசத்தலாக விநாயகர் போல் உருவாகி இருப்பதால், அதனை தினமும் பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.
தற்போது, அதே வன்னி மரத்தின் நடுப்பகுதியில் ஆஞ்சநேயர் உருவம் இயற்கையாகவே வெளிப்பட்டு உள்ளது. இதற்கு சந்தனம், குங்கும் இட்டு மாலை அணிவித்து கலசாபிஷேகம், சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் தினமும் கோயிலுக்கு வந்து இந்த சுயம்பு வன்னி வீர ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோயில் தர்மகத்தா கிருஷ்ணராஜ், அறங்காவல்குழு தலைவர் குப்புசாமி ஆகியோரிடம் கேட்டபோது, சிவனுக்கு உகந்த மரம் வன்னி. வன்னி மரத்தில் சுயம்பு மூர்த்தியாக வீர ஆஞ்சநேயர் சுவாமி தோன்றியுள்ளார்.
வன்னி மரத்தில் ஆஞ்சநேயர் தோன்றி இருப்பது இதுதான் முதல் முறை. கடந்த சில மாதங்களாக இது வெளிப்பட்டாலும், கடந்த 1ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று தான் முழு உருவமாக தோன்றியது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டு வருகிறோம். மரத்தை சுற்றி ராகுவும், கேதுவும் அமைந்து இருப்பதால் சுயம்பு வன்னி வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்த உள்ளோம் என்றார்.
ஏற்பாடுகளை கோயில் காசாளர் சபாபதி, அறங்காவல் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, இளங்கோ உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
புதுவை முத்தியால்பேட்டை சேன்சிமோன்பேட்டையில் உள்ள வன்னிமரத்தில் ஆஞ்சநேயர் உருவம் தெரிந்ததால் பக்தர்கள் வழிபட்டனர்.

No comments:

Post a Comment