Thursday, September 18, 2014


மரத்தில் ஆஞ்சநேயர் உருவம்: பக்தர்கள் பக்தியுடன் பூஜை!
செப்டம்பர் 17,2014


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூரில் புளியமரத்தில் ஆஞ்சநேயர், விநாயகர் உருவம் தெரிவதால்  மக்கள் பக்தியுடன் பூஜை  செய்து வழிபடுகின்றனர். திண்டிவனம் வட்டம் பெரியதச்சூரில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள புளியமரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர்  உருவங்கள் போன்று தெரிந்தன. 

இதை பார்த்த மக்கள் ஆஞ்சநேயர் உருவத்திற்கு வடைமாலை சாற்றினர். விநாயகருக்கு  அருகம்புல் மாலை சாற்றி  சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.  நெடி கிராமத்தில் புளியமரத்தில் விநாயகர் உருவம் தெரிந்து  சில ஆண்டுகளாக தரிசனம்  செய்கின்றனர்.

No comments:

Post a Comment