விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா!
திருவாரூர்:விளமல்பதஞ்சலிமனோகர்திருக்கோயிலில்நவராத்திரிவிழாசிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்கா பரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அரு ள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சௌந்தரிய சௌபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 02.10.2014 வியாழக்கிழமை அன்று காலை 9. 30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதை தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது, படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 03.10.2014 தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்!
24.09.2014 (புதன்) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
25.09.2014 (வியாழன்) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
26.09. 2014 (வெள்ளி) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
27.09.2014 (சனி) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
28.09.2014 (ஞாயிறு) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
29.09.2014 (திங்கள்) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
30.09.2014 (செவ்வாய்) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
01.10.2014 (புதன்) மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
02.10.2014 (வியாழன்) காலை 10 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம்,இரவு 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்.
03.10.2014 (வெள்ளி) காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகம், சவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து குழந் தைகளுக்கு வித்தியா உபதேசம்
No comments:
Post a Comment