பிரம்மஹத்தி தோஷம் போக்கும் விநாயகர் தலங்கள
* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பழங்காமூரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்டகாலமாக உள்ள புற்று ஒன்று விநாயகரின் வடிவமாகவே மாறி உள்ளது.
இந்த விநாயகர் பக்தர்களின் பாவங்களைப்போக்குகிறார். செவ்வாய் தோஷம்உள்ளவர்கள்பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்கவேண்டும்.
பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம். பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
* திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.
* மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் உள்ளன.
அவற்றை ஒரேவேளையில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பர். ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர்அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment