கோபுர தரிசனம்.மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர்ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து. |
Wednesday, September 24, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment