Wednesday, September 24, 2014

நவராத்திரி முதல் நாள்!
செப்டம்பர் 24,2014

Temple images

நவராத்திரியின் முதல் நாளில் மகேஸ்வரியாக அலங்காரம் செய்ய வேண்டும். இவளே மது, கைடப அசுரர்களை அழித்து உலகைக் காத்தவள். அபயம், வரத ஹஸ்தம் கொண்டவளாகவும், புத்தகம், அட்சமாலையைக் கையில் ஏந்தியவளாகவும் குமாரி வடிவில் அமைத்து வழிபட வேண்டும். அரிசி மாக்கோலமிட்டு மல்லிகை, வில்வ மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அண்ட சராசரம் அனைத்திற்கும் பராசக்தியே தலைவியாக இருந்து ஆட்சி செய்கிறாள். ’அண்டம்’ என்றால் ’உலகம்’.’சரம்’என்றால் ’அசைகின்ற பொருள்’. ’அசரம்’என்றால் ’அசையாத பொருள்’. உலகிலுள்ள அசையும், அசையாதபொருட்கள் அனைத்திற்கும் ராஜராஜேஸ்வரியே ஆதாரமாகத் திகழ்கிறாள். அம்பிகையின் இக்கோலத்தை தரிசிப்பவருக்கு மன்னருக்கு நிகரான ராஜபோக வாழ்வு உண்டாகும். 

நைவேத்யம் : வெண் பொங்கல்
பாடல்
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

No comments:

Post a Comment