தமிழன் ஓட்டிய நான்கு குதிரை தேர்
பெரும்பாணாற்றுபபடையில் புலவர் உருத்திரங்கண்ணனார் ( திருவாளர் ருத்ராக்ஷன் ) காஞ்சி மாநகரை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் பற்றிப் பாடுகிறார். அங்கும் நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியே பாடுகிறார் .
Greek Gold ring with Nike in the British Museum
இந்த நான்கு குதிரைகள் படம் கிரேக்க நாட்டில் பானைகள், மோதிரங்கள், சிலைகளில் காணப்படும். இவை 2500 ஆண்டுகள் பழமையானவை. லண்டன் மாநகர பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள ஒரு கிரேக்க தங்க மோதிரத்தில் ‘நைகி’ என்னும் கிரேக்க வெற்றி தேவதை நான்கு குதிரைகள் ரதத்தை ஓட்டுவதைக் காணலாம். கிரேக்க நாட்டில் 2100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நான்கு குதிரைப் படம் பொறித்த ஒரு வெள்ளிக்காசு இரண்டு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.
நான்கு குதிரை ரதங்களை ரோமானியர்களும் பயன்படுத்தி குவாட்ரிகா எனப் பெயர் சூட்டினர். இப்பொழுது உலகின் இகப் புகழ் பெற்ற கட்டிடங்களின் மீது நான்கு குதிரை ரத சிற்பங்களைக் காணலாம். அவை எல்லாம் 200 ஆண்டுகளாகத் தோன்றியவை. கலியுகம் கி.மு. 3100ல் தோன்றியதை பார்த்திவசேகரபுரம் கோ கருநந்தடக்கன் கல்வெட்டும் கூட ஒப்புக்கொள்கிறது. அப்படியானால் எஜமானன் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் டிரைவராக இருந்து ஓட்டிய தேரின் காலம் இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முந்தியது அன்றோ! எகிப்துக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் குதிரை பயிற்சி கொடுத்தவர் நாம் அன்றோ!
No comments:
Post a Comment