Friday, October 24, 2014

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா.



திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா.



ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே;
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே;
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே;
சித்தத்துள் தித்திக்கும் தேனே;
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே;
அம்பலம் ஆடரங்காக;
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை;
தொண்டனேன் விளம்புமா விளம்பே!
  


விளக்கம்:



பிரகாசமாக ஒளிவீசும் விளக்கே;

அழிவு அற்ற ஒரு பொருளே;

சாதாரணஉணர்வால் அறியமுடியாத 

உணர்வே;தெளிவான பளிங்கு 

விடும் ஒளிக்கதிர்கள் சேர்ந்து உரு

வான மணிக்குன்றே;

சிந்தையில் அல்லது மனத்தில் 

தேனாய் இனிப்பவனே;அன்பு 

பெருகும் மனதில் ஆனந்தத்தை 

தரும் கனியே;தில்லை 

அம்பலத்தை நடனம் செய்யும் 

அரங்காக கொண்டுநீ ஆடும் தெய்வ 

திருநடனத்தை;தொண்டனாகிய 

நான் எப்படிசொல்வதென்று எனக்கு 

சொல்வாயாக.

No comments:

Post a Comment