திருமணத் தடை நீங்கும்!
தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் கரையில் அமைந்துள்ளது சிவ, வைணவத் தலமான கபிஸ்தலம். இவ்வூருக்கு அருகே உள்ள கீழ கபிஸ்தலத்தில் அருள்புரிகிறார் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர்.
பழைமையான இத்திருக்கோயிலின் உள்ளே ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், இரட்டை விநாயகர், காசிவிஸ்வநாதர், சனீஸ்வரர், பைரவர் ஆகிய சந்நிதிகளும், கோயில் வெளிப்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன. உற்ஸவ தினங்கள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. காமாட்சி அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.
தற்போது இக்கோயிலில் ராஜகோபுரம் அமைப்பது உள்ளிட்ட பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு : 98436 52401/94437 01223.
அமைவிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில் கீழகபிஸ்தலம் பின்னைமரம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வடக்கே செல்ல வேண்டும்.
அமைவிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில் கீழகபிஸ்தலம் பின்னைமரம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வடக்கே செல்ல வேண்டும்.
இருமனம் காணும் திருமணத்தடை இறையருள் பெற்று இனிதே விலக .....இங்கே வாருங்கள்
திரு /திருமதி குங்கும ராஜி
ReplyDeleteஉங்கள் வலைப்பூவில் பலதரப்பட்ட கோயில்களின் சிறப்புக்களை வெளியிட்டு வந்துள்ளதைப்பார்த்தேன் மகிழ்ச்சி
நான் இந்த கவித்தலாம் சிவன் கோயிலுக்கு திருவாசகம் குறித்துள்ள "கவைத்தலை மேவிய கண்ணே போற்றி "எனும் போற்றித் திருவகவல்
குறிக்கும் வைப்புத்தலக் கோ யில் ஆகும் எனும் ஆய்வினில் சென்று வழிபட்டுள்ளேன் நேரில் என் கருவியிலேயே படங்களை எடுத்துள்ளேன் எனினும் அப்போது கோயில் கருவறை மூடி இருந்ததால் முழுதும் பார்க்க முடியவில்லை அதனால் கருவறையில் நேராக எடுக்காது இக்கோயிலைசார்ந்தது மட்டும் என பல வண்ணப் அச்சுப்படமாக இருக்குமானால் = இங்குள்ள படம் அந்தக்கோயிலைச் சார்ந்ததுதான் ஆகும் என்றால் அதனை என் வரும் கருத்துரையில் சேர்த்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டுக்கொள்கிறேன்
நூ த லோ சு = மயிலை 9445140292
மேலும் என் ஆய்வினில் இதே கவித்தலம் எனும் ஊருக்கு சற் றே வெளியே அடுத்த ஊருக்குச் செல்லும் வழியில் மற்றோரு சிவன் கோயில் அகத்தீசுவரர் எனும் பெயரில் கண்டேன் வழிபட்டேன் அது இதனை விட பரப்பளவில் சிறிதும் பெரிதும் இல்லாமல் ஒரு செங்கல் பணியாகவே காணப்பட்டது அதனில் நடந்த திருவாதிரை விழா youtube வழிலும் வெளியாகியதும் கண்டேன் https://www.youtube.com/watch?v=7bg8uPExf6A
திருவாதிரைக்கூத்து (நடனம்) செம்மையான இசையுடன் இருக்கின்றது மகிழ்ச்சி