Friday, October 24, 2014

                  கணபதி ரூபங்கள்





* திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளசங்கரலிங்க சுவாமி--கோமதி அம்மன் கோவிலில் விநாயகர்சன்னிதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் ஒருகையில் நாகப்பாம்பு உள்ளது. இந்த பாம்பு அவரது கால்கள் மற்றும் இருப்பை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.

** ஆந்திர  மாநிலம்  ஸ்ரீ சைலத்தில் கணபதி கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார் மேலும் விநாயகர் பறக்கும் நிலையில் உள்ள சிலையும் இங்கு காண முடிகிறது.

*** மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர் கோவிலில் முன் மண்டபத்தில் வலப்புறம் தூணில்,பூதத்தின் மீது ஏறி போருக்கு புறப்படும் நிலையில் கணபதியின் அபூர்வ சிற்பம் பொறிக்கப் பட்டுள்ளது 

No comments:

Post a Comment