Saturday, September 20, 2014

திருப்புகழ் வினாயகர் ஸ்துதி......


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

சொல் விளக்கம் .........
உம்பர் தரு ... விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம்
தேனுமணி ... காமதேனு, சிந்தாமணி
கசிவாகி ... (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து
ஒண்கடலிற் தேனமுது ... ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய
அமுதம்போன்ற
உணர்வூறி ... உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும் ... இன்பச் சாற்றினை நான்
உண்ணும்படி பலமுறை
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே ... என்னுயிரின் மீது
ஆதரவு வைத்து அருள்வாயாக
தம்பிதனக்காக ... தம்பியின் (முருகனின்) பொருட்டாக
வனத்(து) அணைவோனே ... தினைப்புனத்திற்கு வந்தடைவோனே
தந்தை வலத்தால் ... தந்தை சிவனை வலம் செய்ததால்
அருள்கைக் கனியோனே ... கையிலே அருளப்பெற்ற பழத்தை
உடையவனே
அன்பர்தமக் கான ... அன்பர்களுக்கு வேண்டிய
நிலைப் பொருளோனே ... நிலைத்து நிற்கும் பொருளாக
விளங்குபவனே
ஐந்து கரத்து ... ஐந்து கரங்களையும்
ஆனைமுகப் பெருமாளே. ... யானைமுகத்தையும் உடைய
பெருமானே.
சித்தி வினாயக மூர்த்திக்கு ஜெய்!!

No comments:

Post a Comment