- அம்பிகையே!
- தங்க மலை உறைபவளே! ஸ்ரீ காம கோடி பாலையே! நற்பண்பினளே!
- மலரோன், அரி போற்றும், தேவீ! மலை மகளே! லலிதையே! சங்கரன் மனைவி, சதியே! மஹா திரிபுர சுந்தரீ!
- சங்குக் கழுத்தினளே! தாமரை நிகர் வதனத்தினளே! களிறு அரசன் நடையினளே! (சிந்தா) மணி வீட்டிலிருப்பவளே! காமனை எரித்தோனுக்கு மகிழ்வளிப்பவளே! சிவ சங்கரீ! எவ்வமயும் இன்-சொல்லினளே!
- சண்ட, முண்டர்களை வதைத்த திறமைசாலியே! கரும்புத் துண்டுக் கோதண்டம் அலங்கரிக்கும், கைகளினளே! புண்டரீக நயனன் அர்ச்சிக்கும், திருவடியுடைய, திரிபுரத்தினில் உறையும், சிவையே! அரனுக்கு இனியவளே!
- சியாமளா! அம்பிகையே! பிறவிக்கடல் கடத்துவிப்பவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே! விரும்பிய பொருட்பயனருளும், காமாட்சீ! அனைத்துலக சாட்சியே! எவ்வமயமும் (உன்னைப்) போற்றும் என்னைக் காப்பாய்.
Saturday, September 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment