அர்த நாரீஷ்வர அஷ்டகம்:
ச்சம்பேய கௌரார்த சரீரகாயை,
கற்பூர கௌரார்த சரீரகாய,
தம்மில்லகாயை ச்ச ஜடாதராய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
உருக்கி வார்த்த பொன்னைப் போல மின்னும் திருமேனியுடையவள் சக்தி.
கற்பூர ஜோதியைப் போன்று ஜொலி ஜொலிக்கும் திருமேனியுடையவன் சிவபெருமான்.
சக்தி நன்கு அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவள்.
சிவனோ நீண்ட ஜடாமுடியுடன் திகழ்பவன்.
இவ்விதம் அர்த்தநாரியாக வீற்றிருக்கும் சிவ சக்தி திருக்கோலத்தை வணங்குகின்றேன்.
கஸ்தூரிக குங்கும சர்ச்சிதாயை,
சித்த ரஜஸ் புஞ்ச விசர்ச்சிதாய,
க்ருதஸ்மராயை விக்ருத ஸ்மராய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவள் மணம் கமழும் கஸ்தூரியும் குங்குமமும் பூசிய மேனியாள்,
இவனோ மயான சாம்பலை உடல் முழுவதும் பூசியிருப்பவன்.
அவள் அழகு அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இவனோ பந்த பாசங்களை வேரோடு அறுத்தவன்.

ச்சல்லத் கனத் கங்கண நூபுரயை,
பாதப்ஜ ராஜத் பனி நூபுராய,
ஹேமாங்கதாயை புஜகங்கதாய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவள் கால்களில் சலசலக்கும் அழகிய கொலுசுகளை அணிந்திருப்பாள்,
இவனோ விஷமுள்ள ராஜ நாகத்தை கால்களில் சுற்றிக் கொண்டிருப்பவன்.
அவள் தங்கக் காற்சிலம்பு அணிந்திருப்பவள்.
இவனோ பாம்பையே காற்சிலம்பாகக் கொண்டவன்.

விஷால நீலோத்பல லோச்சனாயை,
விகசி பங்கேருக லோச்சனாய,
சமேக்ஷனாயை விஷமேக்ஷனாய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவளுக்கு அகலமான நீலத் தாமரைப்பூவைப் போன்ற விழிகள்,
இவனுக்கு நன்கு மலர்ந்த தாமரைப்பூவை ஒத்த கண்கள்.
அவள் இரட்டைப் படையில் கண்களை உடையவள்.
இவன் ஒற்றைப் படையில் கண்களைக் கொண்டவன்.

மந்தார மலா கலி தாலகாயை,
கபால மாலாங்கித கந்தராய,
திவ்யாம்பராயை ச்ச திகம்பராய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
சக்தியானவள் தேவலோக மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடையவள்,
சிவனோ மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்திருப்பவன்.
அவள் உயர்ந்த அழகிய பட்டாடை உடுத்தியிருப்பாள்.
இவனோ திசைகளையே ஆடையாகக் கொண்ட திகம்பரன் ஆவான்.

அம்போதரா ஷ்யாமள குந்தலயை,
தடித்ப்ரபா தாம்ர ஜடாதராய,
கிரீஷ்வராயை நிகிலேஷ்வராய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவள் அழகிய கார்மேகம் போன்ற மென்மையான கூந்தலுடையவள்,
இவன் தாமிரத்தாலான மின்னலைப் போன்ற ஜடாமுடியுடையவன்.
அவள் மலைகளின் தேவி என அழைக்கப்படுபவள்.
இவன் எல்லையில்லா இப் பிரபஞ்சத்தின் ஈஸ்வரனாக வணங்கப்படுபவன்.

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுந் முக லாஸ்யகாயை,
சமஸ்த சம்ஹாரக தாண்டவாய,
ஜகத் ஜனன்யை ஜகதேக பித்ரே,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவளின் திரு நடனம் இப் பிரபஞ்சத்தில் படைப்புகளை உருவாக்குவதாக உள்ளது,
இவனுடைய தாண்டவமோ அனைத்தையும் மிச்சமின்றி அழிப்பதாக உள்ளது.
அவள் பிரபஞ்சத்தின் தாயாக போற்றப்படுபவள்.
இவன் பிரபஞ்சத்தின் தந்தையாக வணங்கப்படுபவன்.

ப்ரதீப ரத்னோத்ஜ்வல குண்டலாயை,
ஸ்புரன் மஹா பன்னக பூஷனாய,
ஷிவன்விதாயை ச்ச ஷிவன்விதாய,
நமசிவாயை ச்ச நமசிவாய.
அவள் ஒளிரும் ரத்தினங்களாலான குண்டலங்களை அணிந்திருப்பாள்,
இவனோ சர்ப்பங்களையே அணிகலனாக அணிந்திருப்பான்.
இப்படியாக (பல்வேறு தன்மைகளில்) உள்ள சக்தி சிவனிலும், சிவன் சக்தியிலுமாக இரண்டரக் கலந்து அர்த்தநாரியாக வீற்றிருக்கும் சிவ சக்தி திருக்கோலத்தை வணங்குகிறேன்.

No comments:
Post a Comment