Tuesday, October 7, 2014

பலன்களை அள்ளித்தரும் பவுர்ணமி விரதம்.






 இதனால் தான் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பவுர்ணமியன்று வரும் நட்சத்திரத்தின் பெயரைக் கொண்டே அந்த மாதத்திற்கு நம்முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள்.

1.சித்திரை நட் சத்திரத்தில் வரும் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்று அந்த நட்சத்திரத்தின் பெயரைக்கொண்டே கொண்டாடப்படுகிறது.

2.வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான் புத்த பூர்ணிமா என்றும் குறிப்பிடப்படுகிறது.

3.ஆனி மாதம் வரும் பவுர்ணமியில் இருந்து சன்னியாசிகளும், துறவிகளும் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பிப்பதாக சொல்கிறார்கள்.

4.ஆடி மாத பவுர்ணமியைத்தான் குரு பூர்ணிமா என்றும் வியாஸ பூர்ணிமா என்றும் அழைக்கிறோம்.

5.ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரன்று வரும் பவுர்ணமியில் ஆவணி அவிட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

6.புராட்டாசி மாதம் நவராத்திரி விஜய தசமி வெற்றி விழாவைத் தொடர்ந்து வரும் பூராட்டாதி நட்சத்திர பவுர்ணமியில் அம்பாளுக்கு விரதமிருந்து அபிசேக ஆராதனை செய்தால் நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

7. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

8.கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று அதே பெயராலே கார்த்திகை தீப திருவிழாக் கொண்டாடப்படுகிறது.

9. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமியன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை உற்சவம் செய்யப்படுகிறது.

10.தை மாதத்தில் பூச நட்சத்திர பவுர்ணமியும் சேரும் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

11.மாசியில் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியை மாசிமகம் என்று கொண்டாடப்படுகிறது.

12.பங்குனியில் உத்திர நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி நன்னாளில் பங்குனி உத்திரம் என்று எல்லாக் கோவில்களிலும் கொண்டாப்படுகிறது.
     
 இப்படி பவுர்ணமி தினம் நம்மோடும் நம் வாழ்வோரும் ஒன்றிணைந்து இருக்கிறது. எனவே பவுர்ணமி நாளில் விரதம் இருந்து உரிய முறையில் நாம் வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களை பெறலாம்.

No comments:

Post a Comment