மலையடிப்பட்டி குடவரை கோயில் |
குடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில்
இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலை காட்டும் ஒரு விழியப் பதிவே!
திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி. இது
புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும்
பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடவரைக் கோயில்
அமைந்திருக்கின்றது. ஒன்று சிவபெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப
ஸ்வாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த
தந்தி வர்மன் எனும் பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது.
இதே தந்தி வர்மனால்
அமைக்கப்பட்ட ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை ஒரு தனி விழியப் பதிவில் முன்னர் நாம்
வெளியிட்டதை வாசகர்கள் அறிவீர்கள்.
இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில்
ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும்
நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில்
மூலவர் சிலை செதுக்கபப்ட்டிருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ
வடிவங்களும்
என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.
இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச்
சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜ கேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.
இந்தக் குடவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள்
வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாகp பரவி செழித்து இருந்திருக்க வேண்டும்
என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக
இடம்பெறுகின்றது.
இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658 !
![]()
குடைவரை கோயில் முன் புறம்
![]()
கோயில் வாசலில் கதவிட்டு பழுது பார்க்கும் பணி நடைபெறுகின்றது
![]()
அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயத்தின் முன்
கல்வெட்டுக்கள் அதன் அருகே குப்பைகள்
![]()
கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன
![]()
சுவர் புடைப்புச் சித்திரம்
![]()
கல்வெட்டு
![]()
ஸ்ரீ சுப்பிரமணியர்
![]()
ஸ்ரீ சுப்பிரமணியர்
![]()
கல்வெட்டு
![]()
நந்தி - பின்னால் சுவற்றில் புடைப்புச் சிற்பம்
![]()
சப்தமாதர்கள் முன்னிலையில் நந்தி
![]()
சப்தமாதர்கள்
![]()
அரசர் ??
![]()
??
![]()
??
![]()
வெளிப்புறத்தில் பாறை - இங்கு தான் சமணர் படுகைகள் உள்ளன
![]()
பாறையின் மேலே ஒரு சமணர் படுகை
![]()
பாறையின் மேலிருந்து ஒரு காட்சி
![]()
பாறையின் மேலிருந்து மேலும் ஒரு காட்சி
![]()
மலையடிப்பட்டி காட்சி
![]()
பாறையில் சித்திரம் - தெளிவு குறைந்த நிலையில்
![]()
பாறையில் சில கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் சில சித்திரங்கள், கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் சில கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் சில கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் சில கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் கல்வெட்டு
பாறையில் சில கீறல்கள் - இவை எக்காலத்தவை என்பது தெரியவில்லை
![]()
பாறையில் ஒரு சித்திரம்
![]()
பாறையில் ஒரு சித்திரம்
![]()
பாறை முழுமையாக
![]()
பாறையில் கல்வெட்டு
![]()
பாறையின் இடைவெளியில்
![]()
மேலும் ஒரு சமணர் படுகை
![]()
மேலும் ஒரு சமணர் படுகை
![]()
மேலும் ஒரு சமணர் படுகை
![]()
மேலும் ஒரு சமணர் படுகை
![]()
மேலும் ஒரு சமணர் படுகை
![]() ![]()
சித்திரம்
![]()
சித்திரம்
![]()
சித்திரம்
![]()
பாறையில் வடிவம் - கீறல்கள், எக்காலத்தவை எனத் தெரியவில்லை
![]()
பாறையில் வடிவம் - கீறல்கள், எக்காலத்தவை எனத் தெரியவில்லை
![]()
பாறைகள்
![]()
மேலும் சில எழுத்துக்கள்
![]()
மேலும் ஒரு வடிவம்
|
No comments:
Post a Comment