இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்

காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியின் புனித கங்கை நதிக் கரையில் அமைந்திருப்பது தான் விஷ்வநாதர் கோவில். இந்த சிவ ஆலயத்திற்கு ஒவ்வொருவரும் சென்று வர வேண்டும் ஆசைப்படுவார்கள். ஏனெனில் இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கமானது பன்னிரெண்டு ஜோதி லிங்கங்களுள் ஒன்று.

கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்
மந்தாகினி நதி அருகே அமைந்துள்ள கேதார்நாத் கோயிலும், 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்று. இந்த கோவிலானது கர்வால் இமயமலையின் மத்தியில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகை கோவில், ஜம்மு காஷ்மீர்
அமர்நாத் குகைக் கோயிலானது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு குகைக் கோயில். இங்கு
இயற்கையாகவே பனியால் ஆன லிங்கம் உள்ளது.

சோம்நாத் ஜோதிலிங்க கோவில், குஜராத்
சோம்நாத் ஜோதிலிங்க கோவிலானது அரபிக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ள செளராஷ்டிரத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள சிவபெருமானின் பெயரானது சோமமேஸ்வரர். இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கமானது பன்னிரெண்டு ஜோதி லிங்கங்களுள் ஒன்று.

லிங்கராஜ் கோவில், ஒரிஸா
மிகவும் பழமையான கோவில்களில் ஒரிஸாவில் அமைந்துள்ள லிங்கராஜ் கோவில் ஒன்று. இந்த கோவில் தான் இந்துமத புனித யாத்திரைகளில் மிகவும் பெரியது. இதனை "கோவில் நகரம்" என்றும் சொல்வர்.

முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகா
முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகாவில் உள்ள முருடேஸ்வர் கடற்கரை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிவன் கோவில். இங்கு தான் உலகிலேயே மிகவும் பெரிய சிவன் சிலை உள்ளது.

மல்லிகார்ஜுன கோவில், ஆந்திர பிரதேசம்
மல்லிகார்ஜுன கோவில், தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் நகருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோவில் சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலை மிகவும் சிறப்பானது.

மகாகலா கோவில், மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மகாகாலீஸ்வரர் கோவிலும் மிகவும் பிரபலமான கோவில். இதன் சிறப்பு என்னவெனில், ஷிப்ரா நதியில் கரையில் அமைந்துள்ள இந்த கோவில், கும்ப மேளா நடைபெறும் நான்கு இடங்களில் ஒன்றாகும்.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள நந்தி சிலையானது மிகவும் பெரியது. இந்த கோவிலும் இந்தியாவில் உள்ள மிகவும் அழகான பிரபலமான சிவன் கோவில்களுள் ஒன்று.
No comments:
Post a Comment