Sunday, October 5, 2014

ராகு-கேது தோஷம் நீக்கும் ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோவில்
பாம்புடன் தொடர்புடையதாக அரன்வாயல் ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோவில் வரலாறு இருப்பதால் இந்த தலம் மிகச் சிறந்த ராகு-கேது தோஷ நிவர்த்தி தலமாக திகழ்கிறது. ஆனால் சென்னை நகர மக்களில் பெரும்பாலானவர்கள் ராகு-கேது தோஷத்தை போக்கும் மிக அற்புதமான தலம் ஒன்று, நாம் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே இருப்பது கூட தெரியாமல் உள்ளனர். 

ராகு தோஷ நிவர்த்திக்காக காளஹஸ்திக்கு செல்வதையே நம்மில் பெரும்பாலானவர்கள், பழக்கத்தில் வைத்துள்ளனர். ஆனால் அரன்வாயல் தலம் ராகு-கேது தோஷ நிவர்த்திக்காகவே உருவான தலமாகவே திகழ்கிறது. 

இதனால் மற்ற எந்த பரிகார தலங்களையும் விட அரன்வாயல் தலம் ராகு-கேது தோஷ நிவர்த்தியில் முதன்மை பெற்றுத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ராகு-கேது பெயர்ச்சி அடுத்த வாரம் வர உள்ளது. 

இந்த சமயத்தில் ராகு-கேது தோஷம் இருப்பவர்கள் ஒரு தடவை அரன்வாயல் சென்று ஸ்ரீதிருத்தாளீஸ்வரரை வணங்கி விட்டு வந்தாலே போதும் நிச்சயமாக ராகு-கேது தோஷம் பனி போல மறைந்து விடும். 

எனவே ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் தவறாமல் இந்த தலத்தை பயன்படுத்துங்கள். சென்னை, திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து மிக எளிதாக இந்த தலத்துக்கு சென்று வரலாம்.

No comments:

Post a Comment