நாகதோஷ பரிகார தலங்கள்
*ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகுகேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* கும்பகோணம் மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
*சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* நன்னிலம் குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.
* சென்னை, மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
*திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் ராகுகேது சிக்கல் விலகி சுபீட்சம் காண்பீர்கள்.
* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு, கேது தோஷம் நீங்கி வளம் பெருகும்.
No comments:
Post a Comment