Wednesday, October 8, 2014

நயினார் நயினார் திருக்கோயில்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் நயினார் கோயில் உள்ளது. இங்கிருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.    ஒரு சமயம் தூர்வாச முனிவர் அளித்த மாலையை இந்திரன் மரியாதையின்றி வாங்கி அதனை தன் யானையிடம் கொடுத்தான். யுhனை அதனை காலால் இட்டு மிதித்தது. கோபம் கொண்ட தூர்வாச முனிவர் இந்திரனை ஏழையாகும் படி சபித்தார். சாபவிமோசனத்திற்காக இந்திரன் பல ஸ்தலங்களுக்கு அலைந்தான். மருதூர் என்ற ஸ்தலத்தில் உள்ள இறைவனை வணங்கினான். இழந்து போன செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்றான். அத்தலமே திருமருதூர் என அழைக்கப்பட்டது. அதுவே இப்போதைய நயினார் கோயிலாகும்.
  கோயில் பிரகாரத்தில் புற்றடி உள்ளது. இந்த புற்றில் நாகராஜர் வசிக்கிறார். இவருக்கு முட்டை பால் பழம் படைக்கின்றனர்.
  குழந்தைகளுக்கு நோய் நொடி ஏற்பட்டால் குழந்தையை ஏலம் விடும் பழக்கம் உள்ளது. ரூ.20லிருந்து ஏலத்தொகை துவங்குகிறது. யாராவது ஒருவர் ஏலம் கேட்கிறார். அந்த குழந்தையை ஏலம் கேட்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அத்தொகையை கோயிலுக்கு கொடுத்து விட்டு குழந்தையை பெற்றுச் செல்லுகின்றனர். அதுமுதல் குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு நாகநாதரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இங்கு அம்பாள் சௌந்தர்ய நாயகி என அழைக்கப்படுகிறார். ஆடி மாதத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆடி மாத விழாவில் காப்பு கட்டிய பிறகு இவ்வூரில் எந்த சுபகாரியமும் நடத்துவதில்லை.
   முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள் சுவாமிக்கு அடுப்புக் கரியை காணிக்கையாக தருகிறார்கள். இதன் முலம் நிரந்தரமாக கரும்புள்ளி வராது என்பது நம்பிக்கை உடலில் சிறு சிறு மருக்கள் உள்ளவர்கள் உப்பு மிளகு காணிக்கையாக தருகிறார்கள். நாகநாதரை வேண்டியதால் ராகு கேது தோஷம் விலகுகிறது.
  கோயிலில் உள்ள வாசுகி தீர்த்தம் மிகவும் புண்ணிய தீர்த்த ஆகும்.
  ஒரு சமயம் முல்லா சாகிப் என்பவரது வாய் பேச முடியாத பெண் குழந்தை இங்குள்ள நாகநாதரை பார்த்து அல்லாஹ் நாயினார் ஆண்டவர் என்று வாய் திறந்து பேசினாள். முல்லா பெருமிதத்துடன் நீரே நாயினார் என்று போற்றி சிவபெருமானை வணங்கினார். இது முதல் நயினார் கோயில் என வழங்கப்பட்டது.
  இப்போதும் முஸ்லீம் மக்கள் தங்கள் நோய் நீங்க இந்த கோயிலுக்கு வந்து பள்ளியறை முன்பு நின்று வணங்கி செல்கின்றனர்.
  அவர்கள் இக்கோயிலை பள்ளிவாசலாக கருதுகின்றனர்.

No comments:

Post a Comment