Wednesday, October 8, 2014

ராமேஸ்வரம் (பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி)

இந்தியாவின் புகழ் பெற்ற ஸ்தலம ராமேஸ்வரம் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி விட்டு (அக்னி தீர்த்தம்) கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களிலும் நீராடி வந்தாலே பாவம் நீங்கிவிட்டதாக கருதுகிறார்கள்.    குறிப்பாக ராகு கேது தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நடராஜர் சன்னதியில் இருந்து பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிப்பட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.
  சிவபெருமானின் நடனத்தை காண தவம் செய்தவர்கள் பதஞ்சலி வியாக்ரதபாதர் என்ற இரு முனிவர்கள். பதஞ்சலி மனித உடலும் பாம்பு தலையும் வேண்டி பெற்றார். வியாக்ரதபாதர் புலியின் கால்களை வேண்டி பெற்றார். பதஞ்சலி முனிவர் ராமேஸ்வரம் வந்த போது கோயிலில் ஜீவசமாதி ஆனார். கோயிலில் இந்த சமாதியை மறைத்து திரைகட்டியுள்ளார்
  நடராஜர் சன்னதியை சுற்றிலும் நாகப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  கடற்கரையில் கும்பம் வைத்து பூசை நடத்தி அர்ச்சகர்களால் தரப்படும் நாகர் சிலையை இந்த சன்னதியில் பிரதிஷ்டை செய்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தாங்கள் வைத்த நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றனர். சிலை அடையாளம் காண பெயரை பொரித்து வைக்கின்றனர்.
  இந்த பூசைக்கும் கோயிலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அர்ச்சகர்கள் இந்த பூசைக்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர். 

No comments:

Post a Comment