கோடக நல்லூர் அருள்மிகு பிருகன் மாதவன் திருக்கோயில்
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் கண்ணையும் கருத்தையும் கவரும் இயற்கை சூழ்நிலையில் தேவர்களின் உலகில் நாகப்பாம்பான கார்கோடகனுக்கு ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுத்ததால் இந்த திவ்ய சேஷ்த்ரம் கார்கோடகசேஷ்த்ரம் எனப்பட்டது. தற்போது கோடகநல்லூர் என அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் உலகிலுள்ள மிகப்பெரிய சர்பங்களில் அதிக சக்தி வாய்ந்தவை வாசுகி மற்றும் கார்கோடகன் ஆகிய இருசர்பங்களாகும். கார்கோடகன் பூமியில் வந்து அடர்ந்த காடு ஒன்றில் தவமிருந்த நிலையில் பயங்கரமான காட்டுத்தீ பற்றிக் கொண்டது. அப்போது அக்காட்டிற்கு வந்த சக்கரவர்த்தி நளமஹாராஜன் கார்கோடகனை காப்பாற்றினார்.71ஃ2 சனியின் பிடியில் இருந்த நளமஹாராஜனுக்கு கார்கோடகன் தன் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு மிகவும் உதவினான். அத்தகைய மகத்தான சேஷத்ரமே கார்கோடகசேஷத்ரமாகும்.
ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கு முக்கியமாக திருநாகேஸ்வர தரிசனமும் கேதுவினால் ஏற்படும் தோஷத்திற்கு திருகாளஹஸ்தியும் முக்கியமான ஸ்தலமாகும். இந்த இரு ஸ்தலங்களில் செய்த பரிகாரத்தால் தீர்க்க முடியாத தோஷத்தையும் தீர்த்து வைக்கும் திவ்யஸ்தலமே கார்கோடகசேஷ்த்ரமாகும். இங்கு எம்பெருமான் மாதவனுக்கும் கருடனுக்கும் அமிர்தகலசம் என்ற விஷேச பிரசாதத்தை சமர்ப்பிக்க தோஷங்கள் யாவும் நீங்குகின்றது. இந்த ஸ்தலம் திரேதாயுகத்திலிருந்து இருந்து வருவதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

No comments:
Post a Comment